ஜாக்சன் துரை 'காமெடி மழை' பாராட்டும் ரசிகர்கள்!
சென்னை: சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் 'ஜாக்சன் துரை'.
'பர்மா' புகழ் தரணி தரண் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜாக்சன் துரை'க்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். நடிகர் சத்யராஜ் முதன்முறையாக இப்படத்தில் பேயாக நடித்திருக்கிறார்.
கோலிவுட்டில் பேய்களின் ஆட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்திருக்கும் ஜாக்சன் துரைக்கு ரசிகர்கள் வரவேற்பு எப்படி இருக்கிறது? என்பதை பார்க்கலாம்.
சத்யராஜ் என்ட்ரி
ஜாக்சன் துரை முதல் பாதி முடிந்தது. 2 வது பாதியில் சத்யராஜ் என்ட்ரிக்காக காத்திருக்கிறேன் என ஆதிபன் கூறியிருக்கிறார்.
ஒருமுறை
ஜாக்சன் துரையில் மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் காமெடி நன்றாக இருக்கிறது. ஒருமுறை பார்க்கலாம் என்று முகுந்தன் தெரிவித்துள்ளார்.
இடைவேளை
இடைவேளை வரை படத்தில் கதையே இல்லை என்று சரவணன் படத்தை கலாய்க்க செய்திருக்கிறார்.
விஜய் ரசிகர்கள்
'வேட்டைக்காரன்' படத்தின் வசனம் 'செல்பி புள்ள' பாடல் ஆகியவை படத்தில் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி பாராட்டியிருக்கிறார் புருஷோத்.
மொத்தத்தில் இந்த 'ஜாக்சன் துரை'யை ஒருமுறை பார்க்கலாம்....


Click it and Unblock the Notifications











