அச்சச்சோ.. இப்படி ஆகிடுச்சே.. கடைசியில் காதலர் மீது புகார் கொடுத்த பிரபல நடிகை.. ஏன் தெரியுமா?

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது காதலர் சுகேஷ் சந்திரசேகர் மீது போலீசில் பரபரப்பாக புகார் ஒன்றை அளித்து வழக்கும் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மாடல் அழகியாக சுற்றித் திரிந்த ஜாக்குலினை பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாற்றியதே சுகேஷ் தான் என கூறப்பட்டு வந்தது.

200 கோடி ரூபாய் பண மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டு இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கும் நடிகை ஜாக்குலின் இருந்த ரகசிய காதல் தொடர்பு கடந்த ஆண்டு அம்பலமானது.

Jacqueline Fernandez files FIR against conman Sukesh


கட்டிப்பிடித்து முத்தம்: படுக்கை அறையில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விளக்கமாக கட்டிப்பிடித்து முத்தம் தரும் புகைப்படங்கள் வெளியான நிலையில், நாங்கள் இருவருமே காதலர்கள் தான் என ஜாக்குலின் போட்டு உடைத்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆனால் அதுவே தற்போது அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

200 கோடி பணம் மோசடி: திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ், அங்கிருந்தபடியே பிரபல தொழிலதிபர் மனைவியிடம் அவரது கணவருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ200 கோடி வரை மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுகேஷுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில், ஜாக்குலினுக்கு காதலர் தின வாழ்த்தை எல்லாம் சிறையில் இருந்தபடியே அனுப்பி அதிர வைத்தார்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகள்: சுமார் 10 கோடிக்கும் அதிகமான உள்ள பரிசுகளை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சுகேஷ் வழங்கியதை துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் நடிகையின் பாஸ்போர்ட்டையும் முடக்கி அவர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என தடை விதித்தனர்.

Jacqueline Fernandez files FIR against conman Sukesh


கொலை மிரட்டல்: ஆரம்பத்தில் சுகேஷை தனது காதலர் என சொல்லி வந்த நடிகை ஜாக்குலின் தற்போது சுகேஷ் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். மேலும், டெல்லி கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற நடிகை தனக்கும் சுகேஷுக்கும் சட்டவிரோதமாக எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் தேவையில்லாமல் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். தனக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என டெல்லி கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு புகார் கடிதம் ஒன்றை அளித்த ஜாக்குலின் அதிகாரபூர்வமாக எஃப்ஐஆர் ஒன்றையும் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதலர் தினத்துக்கு நல்ல பரிசு: ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் காதலர் தினத்துக்கு சரியான பரிசை தனது ரகசிய காதலுக்கு ஜாக்குலின் கொடுத்துள்ளார் என பாலிவுட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நடிகை ஜாக்குலினை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மோசடி மன்னன் சுகேஷ் உடன் ஜாக்குலின் தொடர்பு இருப்பதாக புகார்கள் வெளியான நிலையிலும், பாலிவுட்டில் தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வருகிறார் ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X