twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ வீட்டில் விடிய விடிய பார்ட்டி: கார் விபத்தில் சிக்கிய நடிகை

    By Siva
    |

    Recommended Video

    சல்மான் கான் ஹீரோயின் குடித்துவிட்டு கார் விபத்தில் சிக்கினார்!- வீடியோ

    மும்பை: நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

    இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்ணான்டஸ் மும்பையில் தங்கி இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது சல்மான் கானுடன் சேர்ந்து ரேஸ் 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    சல்மானுடன் பைக்கில் சென்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

    பார்ட்டி

    பார்ட்டி

    ரேஸ் 3 படக்குழுவினருக்கு சல்மான் கான் தனது வீட்டில் நேற்று இரவு பார்ட்டி கொடுத்தார். விடிய விடிய நடந்த பார்ட்டியில் ஜாக்குலின் பெர்ணான்டஸும் கலந்து கொண்டார்.

    விபத்து

    விபத்து

    இரவு 2.20 மணி அளவில் ஜாக்குலின் சல்மான் கான் வீட்டில் இருந்து கிளம்பினார். 2.45 மணிக்கு அவர் சென்ற கார் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ஜாக்குலின்

    ஜாக்குலின்

    காரில் பின் சீட்டில் இருந்த ஜாக்குலின் காயம் இன்றி தப்பித்தார். காரின் ஹெட்லைட்டுகள் மட்டுமே உடைந்தது. ஜாக்குலினின் கார் விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகியுள்ளது.

    விமான நிலையம்

    விமான நிலையம்

    சல்மான் கானும், ஜாக்குலினும் ரேஸ் 3 படப்பிடிப்பிற்காக இன்று மும்பையில் இருந்து ஜோத்பூர் கிளம்பிச் சென்றுள்ளனர். விமான நிலையத்தில் சல்மானை பார்த்த சிறுமி ஓடி வந்து அவருடன் செல்ஃபி எடுத்தார்.

    English summary
    Bollywood actress Jacqueline Fernandez met with an accident in Mumbai when her car rammed into an autorickshaw in the wee hours today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X