டாப்லெஸ் போஸ்.. நீச்சல் குளம்.. என்ன ஜாக்குலின் இதெல்லாம்? வாயை பிளக்கும் ரசிகர்கள்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் நடிப்பில் உருவாகியுள்ள வீடியோ பாடலின் ஹாட் போஸ்டர் வெளியாகி உள்ளது.

ஆடைகளின்றி, அரை நிர்வாணமாக நீச்சல் குளத்தில் இருக்கும் போஸ்டரை டி-சீரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள Mere Angne Mein படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

டாப்லெஸ்

பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள மேரே ஆங்னே மெயின் எனும் வீடியோ பாடலில் நடித்துள்ளார். ராதிகா ராவ் மற்றும் வினய் சப்ரு இயக்கத்தில் உருவாகி உள்ள அந்த வீடியோ பாடலுக்காக ஆடையின்றி ஜாக்குலின் கொடுத்துள்ள போஸ் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நடிகர்

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் ரன்னர் அப் ஆன அஸிம் ரியாஸ் உடன் இந்த வீடியோ பாடலுக்கு ஜாக்குலின் நடனமாடி உள்ளார். ராணி உடையில் ஜாக்குலினும், மாடர்ன் உடையில் அஸிமும் இருக்கும் வித்தியாசமான பின்னணியில் இந்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அந்த காலத்து ராணியாக ஜாக்குலின் நடித்து அசத்தியுள்ளார்.

இலங்கை நடிகை

இலங்கை நடிகை

இலங்கை நாட்டை சேர்ந்த நடிகையான ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ், கடந்த 2009ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அலாதீன் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர், பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிட்ட அவர், கிக், ரேஸ் 3, ஜூட்வா 2. டிஷூம், எ ஜெண்டில்மேன், ஹவுஸ்ஃபுல் 3 என பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து வருகிறார்.

வைரல் வீடியோ

பிக்பாஸ் பிரபலம் அஸிம் ரியாஸ் உடன் புதுசா ஜோடி போட்டு நடித்துள்ள ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில், அந்த வீடியோவின் மேக்கிங் வீடியோவையும், அஸிமுடன் செய்யும் குறும்புத்தனமான அட்டகாசங்களையும் வீடியோவாக எடுத்து பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

Recommended Video

Shalu Shammu walks out from reality Show | Comedy Killadis
மகளிர் தினம்

மகளிர் தினம்

நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்து விசேஷ நாட்கள் வருவதால், நாளை Mere Angne Mein வீடியோ பாடலை ரிலீஸ் செய்ய டி-சீரிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது, ஜாக்குலின் வெளியிட்டுள்ள இந்த ஹாட் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Read more about: jacqueline fernandez
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X