கையை அப்படி வச்சு, இங்க ஒரு லுக்.. இது என்ன ஸ்டைலு? வைரலாகும் நடிகையின் ஒர்க் அவுட் போட்டோ!
மும்பை: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளியிட்டுள்ள ஒர்க் அவுட் போட்டோ வைரலாகி வருகிறது.
பாலிவுட்டின் ஸ்மைல் குயின் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இலங்கையை சேர்ந்த இவர், இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
அமிதாப் பச்சன், சஞ்சய் தத், ரிதேஷ் தேஷ்முக் நடித்த அலாதீன் என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ஜாக்குலின்.

ஹவுஸ்புல் 2
இதைத் தொடர்ந்து, இம்ரான் ஹாஸ்மியின் மர்டர் 2, அக்ஷய் குமாருடன் ஹவுஸ்புல் 2, டிஷூம், ஜூத்வா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடியிருக்கிறார். பிரபாஸ், ஷ்ரத்தா தாஸ் நடிப்பில் உருவான சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

சீரியல் கில்லர்
நெட்பிளிக்ஸ் படங்களான டிரைவ், மிசஸ் சீரியல் கில்லர் படங்களிலும் நடித்திருந்த ஜாக்குலின், அடுத்து, அட்டாக் என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் நேரத்தில் சல்மான் கானின் பண்ணை வீட்டில் அவர் வசித்து வந்தார். சமீபத்தில் இவருடைய, இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் 46 மில்லியனை தாண்டியது.

இன்ப அதிர்ச்சி
இதற்காக ரசிகர்களுக்கு நன்றி சொன்ன நடிகை ஜாக்குலின், உடலை பூக்களால் மறைத்து, டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த போட்டோஸ் வைரலானது. இந்நிலையில், தனது உதவியாளருக்கு ஸ்வான்கி காரை பரிசளித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார், சில மாதங்களுக்கு முன்.

ஒர்க் அவுட் போட்டோ
இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு போட்டோக்களை போஸ்ட் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஹீரோயின்களில் இவரும் ஒருவர். அவர் இப்போது ஒர்க் அவுட் பண்ணும்போது எடுத்துள்ள போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ வேகமாக பரவி வருகிறது.

கவலைப்படாதீங்க
இதற்கு கேப்ஷனாக, நீங்களாகவே இருங்கள் என்று அவர்கள் உங்களிடம் சொல்கிறார்கள். பிறகு அவர்களே தீர்மானிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதற்கு பல நெட்டிசன்ஸ், மத்தவங்களை பத்தி கவலைப்படாதீங்க என்று கூறியுள்ளனர். பலர் இந்த ஸ்டைலை பாராட்டியுள்ளனர். சிலர் அடுத்த செல்ஃபிக்காக காத்திருப்பதாகக் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











