லாக்டவுன் காரணமாக, பிரபல ஹீரோவின் பண்ணை வீட்டில் இருக்கும் ஹீரோயின்.. அவர் குதிரையுடன் போட்டோஷூட்!
மும்பை: லாக்டவுன் காரணமாக, பிரபல ஹீரோவின் பண்ணை வீட்டில் வசித்து வருகிறார் அந்த நடிகை.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகள் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிரிகரித்து வருகிறது. இதனால், ஊரடங்கு விதிக்கப் பட்டுள்ளது.

நடிகர், நடிகைகள்
இருந்தும் இந்த நோய் தொற்று அதிகமாகவே பரவி இருக்கிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்கின்றனர். நடிகர், நடிகைகளும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

வீடியோ, போட்டோ
வீடுகளில் இருந்தபடி தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் ஹீரோ சல்மான் கான், லாக்டவுன் காரணமாக தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இவரது பண்ணை வீடு, பன்வல் என்ற பகுதியில் இருக்கிறது.

டிஜிட்டல் எடிஷன்
நடிகைகள் லுலியா வன்டுர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரும் அங்கு தங்கியுள்ளனர். இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில், ஹார்பர்ஸ் பஜார் என்ற இதழின் டிஜிட்டல் எடிஷனுக்காக, ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இதில் நடிகை ஜாக்குலினை விதவிதமாக இங்கு போட்டோ எடுத்துள்ளனர்.

குதிரையுடன் போஸ்
அதில், சல்மான் கானுக்கு சொந்தமான குதிரையுடன் போஸ் கொடுத்துள்ளார் அவர். இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாக்குலின் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. இதற்கிடையே அவர் கூறும்போது, 'இந்த லாக்டவுன், எனக்கு சுதந்தரமான அனுபவமாக இருக்கிறது. பலர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவேன்.

பிரார்த்தனை
நான் இந்த பண்ணை வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறேன். இங்கிருந்தபடி தேவைப்படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். அவர்களின் வலிமைக்கும் ஆரோக்கியத்துக்கும் பிரார்த்தனை செய்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். இந்தியில் பல படங்களின் நடித்துள்ள ஜாக்குலின், பிரபாஸின் சாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.


Click it and Unblock the Notifications











