பிகிலில் பார்க்காத கதிரின் ஆட்டத்தை ஜடாவில் பார்ப்பீங்க!

சென்னை: பரியேறும் பெருமாள், பிகில் படங்களில் நடித்த நடிகர் கதிர், நடிப்பில் உருவாகியுள்ள ஜடா திரைப்படம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகிறது.

கதிர், யோகி பாபு, ரோஷினி நடிப்பில் உருவாகியுள்ள ஜடா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் படத்தை போல வடசென்னையை மையமாக வைத்து விளையாட்டு மற்றும் அரசியல் கலந்த படமாக ஜடா உருவாகியுள்ளது.

பிகில்

பிகில்

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படத்தில் இளம் வயது விஜய்யின் நண்பராகவும், பெண்கள் அணியின் கோச்சாகவும் கதிர் நடித்திருப்பார். ஆனால், பிகில் படத்தில் நடிகர் கதிருக்கு நடிப்பதற்கு மிகப்பெரிய ஸ்கோப் கதையில் இல்லை. அதனை ஜடா படத்தின் மூலம் தீர்த்து வைக்கவுள்ளார்.

யோகி பாபு

யோகி பாபு

பிகில் படத்தில் விஜய்யின் பிகில் அணியில் இருந்த யோகி பாபு, கதிரின் ஜடா படத்திலும் கால்பந்தாட்ட வீரராக நடித்துள்ளார். பிரம்மாண்ட செட், சிஜி உதவியில்லாமல், ஜடா படத்தில் வரும் ரியல் ஃபுட்பாஸ் போட்டியில் யோகி பாபு மற்றும் கதிர் ஆடும் ஆட்டம் டீசரில் தெறிக்கவிடுகிறது. பரியேறும் பெருமாள் படத்திலும் கதிர், யோகி பாபு காம்பினேஷன் சூப்பரா ஒர்க்கவுட் ஆகியிருந்த நிலையில், ஜடா படத்திலும் இவர்கள் காம்பினேஷன் தொடர்கிறது.

இயக்குநர் யார்

அறிமுக இயக்குநர் குமரன் இயக்கத்தில் ஜடா படம் உருவாகியுள்ளது. பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தை போல இந்த படத்தின் மேக்கிங்கும் வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்டத்துடன் அரசியலும் கலந்து ஸ்போர்ட்ஸ் த்ரில்லர் படமாக ஜடா உருவாகியுள்ளது.

யு/ஏ

ஜடா படத்தில் வன்முறை காட்சிகள் இடம்பெறுவதால், இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும், ஜடா திரைப்படம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகிறது. அக்டோபரில் பிகில் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகர் கதிருக்கு ஜடா படமும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

More from Filmibeat

Read more about: kathir கதிர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X