Just In
Don't Miss!
- Lifestyle
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிகிலில் மிஸ்ஸானது.. ஜடாவில் இருக்குமா? வைரலாகும் ஃபுட்பால் ஆந்தம்!
சென்னை: கதிர் நடிப்பில் உருவாகியுள்ள் ஜடா படத்தில் இடம்பெற்றுள்ள ஃபுட்பால் ஆந்தம் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மெட்ராஸ் படத்தில் ஆரம்பத்தில் வரும் எங்க ஊரு மெட்ராஸ் பாடல் போலவே இந்த பாடலும் மற்றவர்களை காட்சிப் படுத்திவிட்டு, கடைசியாக ஹீரோ கதிரை காட்சிப் படுத்தியுள்ளது.
வெகுஜன மக்கள் ஆடும் ஃபுட்பால் படமாக உருவாக்கப்பட்டுள்ள ஜடா படம் ஸ்போர்ட்ஸ் படத்தை தாண்டி ஹாரர் படமாகவும் உருவாகியுள்ளது.

வித்தியாசம்
ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாரர் கலந்த படங்கள் இதற்கு முன்னதாக வந்திருக்கிறதா என்பது சந்தேகம் தான். அந்த வகையில் வித்தியாசமான காம்பினேஷனாக ஜடா படம் உருவாகியுள்ளது. குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார்.

கடும் போட்டி
டிசம்பர் 6ம் தேதி ரிலீசாகும் கதிரின் ஜடா படத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே, சுந்தர். சி-ன் இருட்டு, தினேஷின் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என வரிசைக் கட்டி பல இளம் ஹீரோக்களின் படங்கள் போட்டி போட காத்திருக்கின்றன. இவற்றுக்கு நடுவில் கதிர் கோல் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிகிலில் மிஸ்ஸானது
பெண்கள் ஃபுட்பால் படமாக உருவான பிகில் படத்தில் ரியாலிட்டி மிஸ் ஆன நிலையில், கதிரின் இந்த ஃபுட்பால் படத்தில் அந்த ரியாலிட்டி நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிகில் படத்தை தொடர்ந்து, கதிர் மற்றும் யோகி பாபு இந்த படத்திலும் ஃபுட்பால் ஆடுகின்றனர்.
ஃபுட்பால் ஆந்தம்
பிகில் படத்தில் பெண்களுக்கான ஆந்தமாக சிங்கப்பெண்ணே பாடல் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், கதிர் நடிக்கும் ஜடா படத்தில் ஃபுட்பால் ஆந்தம் ஒன்றை இசையமைத்துள்ளார் சாம் சி.எஸ். 'டாரக்கே டாரக்கே' என தொடங்கும் அந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
|
டிரெண்டிங்
ஜடா படத்தின் ஃபுட்பால் ஆந்தம் ரிலீசாகியுள்ள நிலையில், ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. தமிழில் ஒரு ஃபுட்பால் ஆந்தம் என்றும் நைஸ் விசுவல்ஸ் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.