Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நவீன தொழில்நுட்பத்தில் உருவாகும் ஜதுரா…படத்தை பாராட்டிய பி.சி. ஸ்ரீராம்
சென்னை : தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் படங்களை அதிக பேர் ரசிக்க காரணம் விஷுவல் எபெக்ட்ஸ். சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய படங்கள் உலக மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த தரத்தில் தற்போது இந்தியாவில் முதல் முறையாக முழுக்க முழுக்க விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய 'ஜதுரா' என்னும் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் உருவாகி வருகிறது.
ஜதுரா என்கிற தமிழ் திரைப்படம், இந்தியாவில் முதல் முறையாக ரியல் டைம் வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் விர்சுவல் புரொடக்ஷன் முறையில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
ஆர்.ஜே.பார்த்திபன் இயக்கும்
தொழில் நுட்பத்திலும், தரத்திலும், திரைத்துறையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான விஷயமாகும். இது வருங்கால இந்திய சினிமாவின் முதல் முயற்சி. 'ஜதுரா' படத்தை சந்திராம்பா தியேட்டர்ஸ் சார்பாக முத்து கிருஷ்ணன் தயாரித்து வருகிறார். ஆர்.ஜே.பார்த்திபன் இப்படத்தை இயக்குகிறார். வி.எப்.எக்ஸ் இயக்குனராக பெமில் ரோஜர் பணியாற்றுகிறார்.
முன்னணி நடிகர்கள்
ரட்சகன் ஸ்ரீதர் இசையமைக்கும் இப்படத்திற்கு மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஜெனிபர் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். மைக்கேல் ராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகளாக இருப்பவர்கள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இவர்களின் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.
பெரிய படத்தை.. பெரிய ஸ்க்ரீன்ல தான் பார்க்கணும்.. டெனெட் படத்தை தியேட்டரில் பார்த்த டாம் க்ரூஸ்!
பி.சி.ஸ்ரீராம் பாராட்டு
பல புதிய படங்கள் லாக்டவுன் முடிந்தவுடன் முழு மூச்சாக வெளிவர இருக்கிறது பல ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் வண்ணம் இந்த கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த படமாக இந்த படம் மிக பெரிய அளவில் பேசப்படும் என்பதை இந்த ஒட்டு மொத்த குழுவும் தெரிவித்து உள்ளனர் தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தி இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.