ரஜினிகாந்த், விஜய் எல்லாம் லைகாவை பார்த்து கேட்டாங்களா?.. ஜாபர் சாதிக் பிரச்சனை.. அமீர் காட்டம்!

சென்னை: போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய ஜாபர் சாதிக் தயாரிப்பில் இயக்குநர் அமீர் நடித்த ’இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படம் பாதியிலே நின்று விட்டது. ஜாபர் சாதிக்குடன் பல ஆண்டுகள் நெருங்கிய நட்பில் இருந்த அமீரை போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் பல நாட்கள் கழித்து நேற்று நடைபெற்ற ’உயிர் தமிழுக்கு’ படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அமீர் கலந்து கொண்ட நிலையில் அவரிடம் சரமாரியான கேள்விகளை பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.

Jaffer Sadiq issue question raised but Ameer attacked Lyca Production directly


அதனால் கடுப்பான அமீர், இது போன்ற கேள்விகளை லைகா நிறுவனத்திடம் எழுப்பினீர்களா, ரஜினிகாந்த் மற்றும் விஜய் கேட்கிறார்களா? என காட்டமாக பதில் அளித்துள்ளார்.

மௌனம் பேசியதே: சூர்யா, திரிஷா மற்றும் லைலா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்த அவர் அடுத்து கார்த்தியை வைத்து இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறினார். ஆனால் அந்த படம் அவருக்கு ஆண்டுகளாக மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. கார்த்தி மற்றும் அமீர் இடையே பிரச்சனையை அந்த படம் உருவாக்கிய நிலையில், இருவரும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் பழைய பகை மறக்காமல் உள்ளனர்.

பருத்திவீரன் பஞ்சாயத்து: தயாரிப்பாளர் ஞானவேல் மற்றும் இயக்குநர் அமீர் இடையே பருத்திவீரன் பஞ்சாயத்து கடந்த ஆண்டு பெரிய அளவில் பற்றிக் கொண்டு எரிந்தது. அந்தப் பிரச்சனை ஓய்ந்து உள்ள நிலையில் அடுத்ததாக ஜாபர் சாதிக் மற்றும் அமீர் இடையேயான தொடர்பு பிரச்சனை பூதாகரமானது.

ஜாபர் சாதிக் உடன் நட்பு: போதைப்பொருள் கடத்தல் மன்னனாக ஜாபர் சாதிக் செயல்பட்டதாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தயாரிப்பில் உருவான மங்கை திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதைப்போல ஜாபர் சாதிக் தயாரிப்பில் தமிழ் நடித்து வந்த இறைவன் மிகப்பெரியவன் படமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் அமீர் மற்றும் ஜாபர் சாதிக் இருவரும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படும் நிலையில், அமீரிடம் அமலாக்கத்துறை மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

ரஜினி, விஜய் கேட்டார்களா?: ஜாபர் சாதிக்கிடம் திடீரென படங்களை தயாரிக்கும் அளவுக்கு பல கோடி ரூபாய் பணம் எப்படி கிடைத்தது என அவருடைய நண்பனாக நீங்கள் ஒருபோதும் கேள்வி எழுப்ப வில்லையா? என்கிற கேள்விக்கு கடுப்பான அமீர் இதே கேள்வியை லைகா நிறுவனத்தைப் பார்த்து எப்போதாவது எழுப்பி இருக்கிறீர்களா? என்றும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் லைகா நிறுவனத்தில் பணியாற்றும் போது அவர்களுக்கு எப்படி காசு வருகிறது, ஐரோப்பாவில் அவர்கள் என்னென்ன வழக்குகளில் சிக்கி இருக்கிறார்கள் என்றெல்லாம் விசாரித்து உள்ளனரா? என கேட்க முடியுமா? என அமீர் கடுப்பாகி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அரசியல் நய்யாண்டி: உயிர் தமிழுக்கு திரைப்படம் வரும் மே 10ம் தேதி திரைக்கு வருகிறது. கவினின் ஸ்டார், சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படங்களுக்கு போட்டியாக அடுத்த வாரம் இந்த படம் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த படம் அரசியல் காமெடி படம் என படக்குழுவினர் கூறியுள்ளனர். படம் வெளியானால் பல சர்ச்சைகள் உருவாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X