Jaffer Sadiq: விக்ரம், ஜெயிலர் பிரபலம் ஜாஃபர் காதலியா இது..? செம்ம க்யூட் ஜோடி தான்!!

சென்னை: கமலின் விக்ரம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜாஃபர் சாதிக்.

டான்ஸரான ஜாஃபர் தற்போது கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

வெந்து தணிந்தது காடு, ரஜினியின் ஜெயிலர் படங்களிலும் ஜாஃபரின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ஜாஃபர் தனது காதலியுடன் இருக்கும் போட்டோஸ் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

 Jaffer Sadiq: Vikram, Jailer fame Jaffer Sadiqs photo with his girlfriend is trending

காதலியுடன் க்யூட் போஸ் கொடுத்த ஜாஃபர்: விஜய் டிவியின் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றவர் ஜாஃபர் சாதிக். கிங்ஸ் ஆஃப் டான்ஸ், ஜோடி நம்பர் 1, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா 2 உட்பட பல டான்ஸ் ஷோக்களில் போட்டியாளராக கலந்துகொண்டார். நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் வெப் சீரிஸில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் ஜாஃபர்.

அதனைப் பார்த்த லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தில் ஒரு ரோல் கொடுத்து சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் கேங்கில் ஒருவராக மாஸ் காட்டினார் ஜாஃபர். கமலின் காலை கட் செய்யப் போகும் காட்சி தான் ஜாஃபரை ரொம்பவே பிரபலமாக்கியது. இன்னொரு பக்கம் பிஸியான கோரியோகிராபராகவும் வலம் வந்தார். தனியாக டான்ஸ் ஸ்டூடியோவும் வைத்து நடத்தி வருகிறார்.

 Jaffer Sadiq: Vikram, Jailer fame Jaffer Sadiqs photo with his girlfriend is trending

விக்ரம் கொடுத்த அறிமுகத்தால், அடுத்தடுத்து சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜெயிலர் படங்களில் இணைந்து நடித்தார். ஜெயிலர் படத்தில் சில காட்சிகளில் ஜாஃபரின் காமெடி பட்டாஸாக இருந்தது. இதனையடுத்து தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என படுபிஸியாக வலம் வரும் ஜாஃபர், தனது காதலியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

ஜாஃபரின் தனித்த அடையாளமே அவரது குறைவான உயரம் தான். ஆனால், அவரது காதலியோ ஜாஃபரை விட வளர்ந்தவராகவும் செம்ம க்யூட்டாகவும் இருக்கிறார். இருவருமே ஸ்டைலாக போஸ் கொடுத்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஜாஃபரின் காதலி பெயர் சித்திகா என தெரியவந்துள்ளது. முக்கியமாக அவருமே டான்ஸர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 Jaffer Sadiq: Vikram, Jailer fame Jaffer Sadiqs photo with his girlfriend is trending

விக்ரம், வெந்து தணிந்தது காடு, ஜெயிலர் என ஜாஃபர் நடிப்பில் இதுவரை 3 படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. ஆனால், அவருக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் மேலும் பல படங்களில் கமிட்டாகியுள்ளார். அந்த சந்தோஷத்தில் தனது காதலி சித்திகாவையும் அறிமுகப்படுத்தியுள்ளார். அதேநேரம் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X