twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர்.. மன்னிப்பு கேட்ட ஜகா பட இயக்குநர்!

    |

    சென்னை: இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்டதற்காக ஜகா படத்தின் இயக்குநர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    கடந்த சில நாட்களாய் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் சில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகி வருகிறது.

    ஆரம்பத்திலேயே சூடுபிடித்த தமிழும் சரஸ்வதியும் சீரியல்.... தொடரில் ரசிகர்கள் ஆர்வம் ஆரம்பத்திலேயே சூடுபிடித்த தமிழும் சரஸ்வதியும் சீரியல்.... தொடரில் ரசிகர்கள் ஆர்வம்

    அந்த வகையில் இந்து கடவுள்களில் ஒன்றான சிவனை அவமதிக்கும் வகையில் போஸ்டர் ஒன்று வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.

    ஜகா திரைப்படம்

    ஜகா திரைப்படம்

    அதாவது, ஆர்.விஜயமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜகா. இந்தப் படத்தில் மைம் கோபி, 'ஆடுகளம்' முருகதாஸ், வலினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாய் பாஸ்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

    சிவனுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்

    சிவனுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்

    ஓம் டாக்கிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் இந்துக்கள் வணங்கும் சிவபெருமானுக்கு கொரோனா உள்ளது போல் முகக்கவசம், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவைகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.

    போஸ்டருக்கு கண்டனம்

    போஸ்டருக்கு கண்டனம்

    இதனால் ஜகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சைக்குள்ளானது. சமூக வலைதளங்களில் பலரும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

    இந்நிலையில் இது தொடர்பாக இயக்குநர் விஜயமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    நிறுவனத்தின் பெயரே ஓம் டாக்கிஸ்

    நிறுவனத்தின் பெயரே ஓம் டாக்கிஸ்

    அதில் அவர் கூறியிருப்பதாவது: "ஓம் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் 'ஜகா'. ஜூலை 11-ம் தேதி எங்களது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அது பலரின் விவாதத்துக்கு உள்ளானது. அதுகுறித்து தெளிவுபடுத்தவே இந்த அறிக்கை. எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே ஓம் டாக்கீஸ்.

    சிவபெருமானை அவமதிப்போமா?

    சிவபெருமானை அவமதிப்போமா?

    பாபநாசம் சிவன் கோயிலில் பூஜை போட்டுவிட்டுத்தான் படப்பிடிப்பையே தொடங்கினோம். அப்படியிருக்கும்போது சிவபெருமானை அவமதிப்போமா? கோவிட்-19 விழிப்புணர்வு நோக்கத்தில் வைக்கப்பட்ட காட்சிதான் அது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறக்கூடாது எனக் கடவுளே சொல்வது போன்றுதான் அந்த போஸ்டர்.

    மலிவான விளம்பரம் இல்லை

    மலிவான விளம்பரம் இல்லை

    சக மனிதர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட, கடவுள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது. படத்தில் எந்த இடத்திலும் கடவுள் அவமதிக்கப்படவில்லை. அதுபோன்ற எண்ணம் எப்போதும் எங்களுக்கு ஏற்படாது.மலிவான விளம்பரம் தேடும் விருப்பம் எங்கள் குழுவினருக்குத் துளியும் இல்லை.

    மன்னிப்பு கோருகிறேன்

    மன்னிப்பு கோருகிறேன்

    இருப்பினும் எந்தவித உள்நோக்கமும் இல்லாது செயல்பட்ட எங்களின் இத்தகைய செயல் பலரின் மனதைப் புண்படுத்தியது அறிந்து வருந்துகிறேன். அதற்காக மன்னிப்பு கோருவதோடு கொரோனா இல்லாத உலகம் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்". இவ்வாறு இயக்குநர் விஜயமுருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Jaga movie director Vijayamurugan apologies for the first look poster. Jaga first look poster in issue for the design.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X