"ஏ அஸ்வினே"... ஒரே நேரத்தில் 3 பட வாய்ப்பு.. குஷியில் "குக்கு" .. விஜய் மேனேஜர்தான் காரணமாம்!

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கும் கோலிவுட்டில் அடுத்தடுத்து வாய்ப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் பலரும் மிகவும் பிரபலமாகி விட்டனர்.

Recommended Video

Ashwin First Emotional Post after Cook with Comali | நான் நினைத்து பார்க்காத ஒன்னு | Pugazh

ஏற்கனவே புகழ் மற்றம் சிவாங்கி ஆகியோர் பெரிய ஸ்டார் ஹீரோக்களின் படங்களில் நடிக்க புக் ஆகி விட்டனர். தற்போது அஸ்வினும் படங்களில் நடிக்க புக் ஆகி உள்ளார். ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். ஏற்கனவே அஸ்வின் நடித்த சிங்கிள் வீடியோ பாடல்கள் தாறுமாறாக ஹிட் அடித்துள்ளன.

Jagadish is the one who first recognized the talent of Ashwin and promoted him aggressively

தற்போது புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க அஸ்வின் புக் ஆகி உள்ளார். தி ரூட் என்ற ஏஜென்சி மூலம் தான் அஸ்வினுக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஏஜென்சியை நடத்துவது வேறு யாருமில்லை விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் தானாம்.

அஸ்வினின் திறமையை பார்த்த ஜெகதீஷ், அதற்கு அங்கீகாரம் வழங்க அவரை ப்ரோமோட் செய்ய நினைத்துள்ளார். இதன் விளைவாகவே அஸ்வினுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் ஒரே சமயத்தில் 3 படங்களில் நடிக்கும் வாய்ப்பு. இந்த படங்களை முன்னணி டைரக்டர்கள் இயக்க உள்ளனராம். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட வாய்ப்புக்கள் நிறைய வந்தாலும், தொடர்ந்து சிங்கிள் வீடியோ பாடல்களையும் அடுத்தடுத்து நடித்து, அசத்தி வருகிறார் அஸ்வின். முதல் படத்தில் நடிப்பதற்கு முன்பே இளைஞர்களின் ஃபேவரைட் ஹீரோ ஆகி விட்டார் அஸ்வின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X