ஜூன் 1ம் தேதி ஜெகமே தந்திரம் படத்தோட ட்ரெயிலர் ரிலீஸ்... கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு
சென்னை : தனுஷ் -ஐஸ்வர்யா லஷ்மி லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ஜெகமே தந்திரம்.
இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்தின் 4 சிங்கிள்கள் வெளியிடப்பட்டு பலத்த வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் வரும் ஜூன் 1ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படத்தின் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் -தனுஷ் கூட்டணி
தனுஷ் -ஐஸ்வர்யா லஷ்மி லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் -தனுஷ் கூட்டணியில் முதல் முறையாக உருவாகியுள்ள இந்த படத்தின் இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார். இந்த படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாரிப்பாளர் சசிக்குமார் அறிவித்துள்ளார்.
1ம் தேதி வெளியீடு
இந்நிலையில் படத்தின் புதிய ட்ரெயிலர் வரும் 1ம் தேதி வெளியாக உள்ளதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. இதே தகவலை படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் படத்தின் போஸ்டரையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இணைத்துள்ளார்.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு
இதனிடையே இந்த அறிவிப்பிற்கு படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஹீரோயின் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தயாரிப்பாளர் அறிவிப்பு
இந்நிலையில் நாளை மறுதினம் வெளியாகவுள்ள படத்தின் புதிய ட்ரெயிலர் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நெட்ப்ளிக்சில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் அதிருப்தி
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீசின் போது நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விரைவில் ஜெகமே தந்திரம் படத்தை திரையரங்குகளில் கொண்டாடுவோம் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது படம் நெட்ப்ளிக்சில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இதனால் தனுஷ் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











