8 பாடல்… 3 தீம் மியூசிக்குடன்… ஜகமே தந்திரம் ஆல்பம் நாளை ரிலீஸ் !
சென்னை : ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ஆல்பம் நாளை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றுவிட்டன.
இதனால், நாளை வெளியாக உள்ள ஆல்பம் ரிலீசை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ இதில் நடித்துள்ளார்.

ஜூன் 18ந் தேதி
இத்திரைப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என கார்த்திக் சுப்புராஜ் கூறிவந்த நிலையில், கொரோனா பரவலால் திரையரங்குகள் மூடப்பட்டு படத்தை தற்போதைக்கு வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், படம் ஜூன் 18ந் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்தது.

டிரைலர்
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது இதன் அக்ஷன் காட்சிகள் டிரைலர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா என்று தனுஷ் பேசும் வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிரைலரை டிரெண்டிங்காக்கி உள்ளது.

ஆல்பம் நாளை ரிலீஸ்
இந்நிலையில், தற்போது இத்திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இதில், ஜகமே தந்திரம் படத்தின் ஆல்பம் நாளை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆல்பத்தில் 8 பாடல்களும் 3 தீம் மியூசிக்குகளும் இடம் பெற்றுள்ளன. இதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











