சன் டிவியில பெரிய சீரியலா எடுத்து விடு.. தனுஷ் செம பன்ச்.. வைரலாகும் ஜகமே தந்திரம் சீன்!

சென்னை: ஜகமே தந்திரம் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை விட அதிகளவிலான நெகட்டிவ் விமர்சனங்களே குவிந்து வருகின்றன.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதையில் பெரியளவில் சொதப்பி விட்டார் என்றும் தனுஷ் ஒருவரே படத்தை கடைசி வரை தாங்கிப் பிடித்து நிற்பதாகவும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்ற இந்த ஒரு காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அல்பாசினோ தப்பிச்சார்

அல்பாசினோ தப்பிச்சார்

பிரேவ் ஹார்ட், கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் பிரம்மாண்ட படைப்புகளில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோவை இந்த படத்தில் பீட்டர் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நல்லா வச்சு காமெடி செய்துள்ளனர். இந்த படத்திற்கு முன்னதாக அல்பாசினோ மற்றும் ராபர்ட் டி நிரோ உள்ளிட்ட ஹாலிவுட் ஜாம்பவான்களை அணுகியதாக கார்த்திக் அளித்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் இருவரும் தப்பித்தார்கள் என கிண்டல் செய்து வருகின்றனர்.

பாவம் ஜோஜு

பாவம் ஜோஜு

மலையாள சினிமா உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜோஜு ஜார்ஜுக்கு சிவதாஸ் என்கிற கதாபாத்திரத்தை கொடுத்து மொக்கை படுத்தி விட்டதாகவும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஏதோ துப்பாக்கியா இருந்தா கூட பரவாயில்லை. ஒரு வயதான டான் அருவா எடுத்து வீசுறப்பக் கூட கட்டி வச்ச பாட்ஷா மாதிரி வெட்டு வாங்குறாரு மனுஷன் என கலாய்த்து வருகின்றனர்.

சன் டிவியில சீரியலா விடு

இத்தனை கலாய்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த ஒரு காட்சியை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து பாராட்டி வருகின்றனர். பாபா பாஸ்கர் கலப்புத் திருமணத்திற்கு எதிராக பேசும் போது, அவங்கள சும்மா விடக் கூடாது என்பார். அப்போது தனுஷ்.. சன் டிவியில பெரிய சீரியலா எடுத்து விடு.. நாடு தாண்டினா நம் எல்லோரையும் கீழ் சாதிக்காரனுங்களாத்தான் பார்க்குறாங்க.. இங்க போராட வேண்டிய விஷயங்கள் நிறை இருக்கு என சொல்லி அப்ளாஸ் அள்ளுகிறார்.

ஊறுகாய் ரோல்

ஊறுகாய் ரோல்

சஞ்சனா நடராஜனை போலவே பாபா பாஸ்கருக்கும் படத்தில் ஊறுகாய் ரோல் தான். அவர் வரும் அந்த ஒரு காட்சி மட்டும் வைரலாகி வரும் நிலையில், ஏதோ தப்பித்துக் கொள்கிறார். குக் வித் கோமாளிக்கு பிறகு ஜகமே தந்திரம் படத்தில் வெயிட்டான ரோல் இவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம். ரகிட ரகிட பாடலுக்கு மட்டுமே ஆடிவிட்டு போயிருக்கலாம் என்றும் கருத்துக்கள் உலா வருகின்றன.

ஒன் மேன் ஆர்மி

ஒன் மேன் ஆர்மி

ஆரம்பத்தில் இருந்து எண்ட் வரை படத்தை ஒன் மேன் ஆர்மியாக தாங்கிப் பிடித்திருப்பது தனுஷ் மட்டும் தான். சில நேரங்களில் அதுவே படத்தை பார்க்கும் ஆடியன்ஸுக்கு சளிப்பைத் தட்டும் விதமாக உள்ளது. டானா, புரோட்டா மாஸ்டரா, காமெடியனா, லவ்வர் பாயா என அவரது கதாபாத்திர ஸ்கெட்சும் காட்சிக்கு காட்சி மாற்றம் கண்டு படத்தை ஆட்டம் காண செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X