twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Jagame Thandhiram... கார்த்திக் சுப்புராஜ் சார் .. ஒரே ஒரு டவுட்டு!

    |

    ஜகமே தந்திரம் படம் வந்தாச்சு, பார்த்து முடிச்சாச்சு.. பல கலவையான கருத்துக்கள் சரமாரியாக வலம் வர ஆரம்பித்துள்ளன.

    Recommended Video

    Jagame Thandhiram | Poster Pakiri Review | Filmibeat Tamil

    படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் நிறைய சந்தேகங்கள், கேள்விகள். முதல் டவுட்டே உண்மையில் இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்தானா என்பதுதான். இது கொஞ்சம் கஷ்டமான சந்தேகம்தான். காரணம், அந்த அளவுக்கு படம் நம்மை ஹெவியாக "தாக்கியது"தான்.

    லம்போர்கினி காருக்கே டிரெஸ் தச்சுப் போட்ட கிம் கர்தாஷியன்.. இன்னும் 6 கலர்ல ரிலீஸ் ஆகப் போகுதாம்!லம்போர்கினி காருக்கே டிரெஸ் தச்சுப் போட்ட கிம் கர்தாஷியன்.. இன்னும் 6 கலர்ல ரிலீஸ் ஆகப் போகுதாம்!

    2014ல் தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய அலையைப் பரப்பியவர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா என்ற படத்தின் மூலமாக இவர் மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியும் இணைந்து ஒரு புயல் போல கோலிவுட்டைக் கலக்கினர். பெருமளவில் பேசப்பட்ட படம். சரியான ட்ரீட்மென்ட்டில் எடுக்கப்பட்ட மாஸ்டர் பீஸ். ஒரு குறும்படத்தை அழகான திரைக்கதை மூலம் பெரிய திரையிலும் பேச வைத்தவர் கார்த்திக் சுப்பராஜ்.

    பீட்ஸா டூ ஜிகர்தண்டா

    பீட்ஸா டூ ஜிகர்தண்டா

    ஒரு சின்னக் கதையை எப்படி அழகாக கொடுக்கலாம், கொண்டு போகலாம் என்பதை அருமையாக சொல்லியிருப்பார் கார்த்திக் சுப்பராஜ். அடுத்து வந்த ஜிகர்தண்டா ரசிகர்களை தெறிக்க விட்ட படம். ரஜினியே வியந்து போய்.. அடடா நான் நடிச்சிருக்கலாம் போலயே இதில் என்று உற்சாகமாகி பாராட்டிய படம். ஜிகர்தண்டா படத்தில் ஒரு தாதாயிசத்தை படு ஜாலியாக விவரித்திருப்பார் கார்த்திக் சுப்பராஜ். அப்படத்திற்கு ஆரம்பத்தில் வரவேற்பு இல்லை, போகப் போக படம் பட்டையைக் கிளப்பியது. அடுத்து வந்த இறைவி வேற லெவல் படம். இதற்கெல்லாம் உச்சமாக வந்து சேர்ந்த படம்தான் பேட்ட.

    பேட்ட பிரமிப்பு

    பேட்ட பிரமிப்பு

    ரஜினிகாந்த்தை மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்தியாசமான கோணத்தில் ரசிகர்கள் பார்த்து ரசிக்க பேட்ட வழிவகுத்தது. ரஜினியை வைத்து பலர் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் ரஜினி படம்னா எப்படி இருக்கணும் என்று அவரது ரசிகராக கார்த்திக் சுப்பராஜ் செதுக்கிய படம்தான் பேட்ட. ரஜினியைப் பிடிக்காதவர்களையும் கூட ரசிக்க வைத்த படமும் கூட.

    எங்கே திரைக்கதை

    எங்கே திரைக்கதை

    இதெல்லாம் கார்த்திக் சுப்பராஜ் படங்கள்.. அதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால் ஜகமே தந்திரம் படத்தின் இயக்குநர் உண்மையில் யார்.. சீரியஸாகவே பலரும் இந்தக் கேள்வியை கேட்டு வருகின்றனர். ஜகமே தந்திரத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தான் என்றால்.. அதற்கு முன்பு வந்த பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கியது யார் என்ற இன்னொரு துணைக் கேள்வியையும் அவர்கள் வைக்கின்றனர்.

    வலுவிழந்த கதை

    வலுவிழந்த கதை

    அந்த அளவுக்கு ஜகமே தந்திரம் படத்தின் ஆக்கம்.. கார்த்திக் சுப்பராஜுக்கு பெரும் சறுக்கலைக் கொடுத்துள்ளது. மதுரை ரவுடி, லண்டனுக்குப் போகிறார்.. அங்கு போய் அதகளம் பண்ணுகிறார்.. இந்த ஒன்லைனில் உள்ள புயல்.. படத்தின் உருவாக்கத்தின்போது வலுவிழந்து போயிருக்கிறது.. மதுரையைச் சேர்ந்த அந்த ரவுடி, லண்டனில் போய் அதிரடி காட்டுகிறான் என்பதை அதே ரூட்டில் போய் சொல்லியிருந்தாலாவது படம் நன்றாக அமைந்திருக்கும்.. ஆனால் அங்கு தான் கார்த்திக் சொதப்பியுள்ளார்.

    சிவதாஸுடன் முடிந்த படம்

    சிவதாஸுடன் முடிந்த படம்

    சிவதாஸ் கேரக்டர் வருகிறது.. பீட்டர் கேரக்டர் வருகிறது.. நடுவில் கூலிப்படைக்காரன் மாதிரி சுருளி கதாபாத்திரம் வருகிறது.. பிறகு சிவதாஸ் கொல்லப்படுகிறார்.. அந்த இடத்திலேயே அந்தப் படம் உண்மையில் முடிந்து விடுகிறது. அதன் பிறகு எடுக்கப்பட்ட ஒவ்வொரு சீனும் வேஸ்ட்..! படத்துக்கு எந்த பலத்தையும் அது கொடுக்கவில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

    ஆரம்ப எதிர்பார்ப்பு

    ஆரம்ப எதிர்பார்ப்பு

    படத்தின் ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் மதுரையிலிருந்து சுருளி லண்டன் வந்து, சிவதாஸுக்கு ஸ்கெட்ச் போட்டு, சிவதாஸுடன் மோதி, கடைசியில் சிவதாஸுடன் உடன்பாடும் கொண்டு.. என காட்சிகள் திசை மாறும்போது, படத்தில் சப்பென ஒரு மந்த நிலை வந்து அமர்ந்து கொள்கிறது. ஏதாவது திருப்பம் வரும்,, திருப்புமுனை வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டே உள்ளனர். ஆனால் அதற்கான வாய்ப்பை இயக்குநர் ரசிகர்களுக்குத் தரவே இல்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

    சிவதாஸ் செத்திருக்கக் கூடாது

    சிவதாஸ் செத்திருக்கக் கூடாது

    சிவதாஸ் கேரக்டர் காலியானதும் படம் திசை தெரியாமல் நடக்கத் தொடங்குகிறது. என்ன செய்வது, ஏது செய்வது என்ற குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறது திரைக்கதை. காரணம் பீட்டர் கேரக்டரை அந்த அளவுக்கு திரைக்கதை பிற்பாதியில் பலவீனப்படுத்தி விடுகிறது. என்ன செய்திருக்கலாம்.. சிவதாஸ் கேரக்டரை இன்னும் வலுவாக்கி, அவரை சுருளியுடன் மோத விட்டிருக்கலாம்.. அப்போது விறுவிறுப்பும் குறையாமல் போயிருக்கும்.. சுருளி கேரக்டருக்கும் ஒரு வெயிட் கிடைத்திருக்கும்.

    முன்னோடி முருகதாஸ்

    முன்னோடி முருகதாஸ்

    இப்படித்தான் ஏ.ஆர். முருகதாஸ் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படம் எடுத்தார். ரஜினி என்ற அவ்வளவு பெரிய நடிகரை வைத்துக் கொண்டு அவர் எடுத்த தர்பார் படம் பெரும் சொதப்பலாக அமைந்தது. அங்கும் பலவீனமான திரைக்கதைதான் ரஜினி இமேஜை காலி செய்தது. இது தமிழ்ப் படமா இல்லை இந்திப் படமா என்று கலாய்க்கும் அளவுக்கு படத்தை போட்டுக் குதறி வைத்திருந்தார் முருகதாஸ்.

    அதே கதிதான் தனுஷுக்கும்

    அதே கதிதான் தனுஷுக்கும்

    அதே போலத்தான் தனுஷை வைத்துக் கொண்டு, அவரை சரியாக பயன்படுத்தாமல் குழம்பியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். இது மதுரை ரவுடி கதையா இல்லை லண்டன் தாதா கதையா அல்லது இலங்கைத் தமிழர்கள் குறித்த கதையா என்ற இலக்கு தெளிவாக இல்லை. சிவதாஸ் கதை முடிந்ததும், கதையில் ஏற்பட்ட தொய்வை கடைசி வரை சரி செய்யாமலேயே விட்டது இன்னொரு பெரிய குழப்பம். கதையில் அழுத்தமான காட்சி எதுவுமே இல்லை. கேஷுவலாகவும் படம் இல்லை, சீரியஸாகவும் இல்லை, குழப்ப மூட்டையாக மட்டுமே இருக்கிறது.

    கடைசில சிரிக்க வச்சுட்டாரே

    கடைசில சிரிக்க வச்சுட்டாரே

    படத்தின் கிளைமேக்ஸைப் பார்த்து பலரும் சிரிக்கும் அளவுக்கு கார்த்திக் சுப்பராஜின் இயக்கம் பலவீனப்பட்டு நிற்பது பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இறைவி படத்தின் கிளைமேக்ஸ் வேறு நமக்கு நினைவுக்கு வந்து தொலைக்கிறது. அதை எப்படி அழகாக கொடுத்திருப்பார் கார்த்திக் சுப்பராஜ்.. இங்கு ஏன் சொதப்பினார்.. ஆச்சரியமாகவும் வருகிறது.. குழப்பமாகவும் இருக்கிறது.

    சீரியஸாகவே நாமும் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.. ஜகமே தந்திரம் உண்மையிலேயே கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம்தானா!!

    English summary
    Jagame Thandhiram: Karthick Subbaraj fails to win the fans with weak storyline
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X