சில மணிநேரங்களில் 3 மில்லியன் வியூக்கள்... தெறிக்க விடும் ஜகமே தந்திரம் ட்ரெயிலர்

சென்னை : இன்றைய தினம் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது.

இந்த ட்ரெயிலர் குறித்த அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்பே படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள இந்த ட்ரெயிலர் வெளியான 6 மணிநேரத்திலேயே 3 மில்லியன் வியூக்களை தாண்டி சாதனை செய்துள்ளது.

புதிய ட்ரெயிலர்

புதிய ட்ரெயிலர்

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான படத்தின் 4 பாடல்களும் மிகுந்த வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் புதிய ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.

குவியும் பாராட்டுக்கள்

குவியும் பாராட்டுக்கள்

கடந்த இரு தினங்களுக்கு முன்பே ட்ரெயிலர் குறித்த அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் 10 மணியளவில் படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் ட்ரெயிலர் குறித்த தொடர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் அதிருப்தி

தனுஷ் அதிருப்தி

படம் நெட்ப்ளிக்சில் வரும் 18ம் தேதி வெளியாக உள்ளது. இதுகுறித்து நடிகர் தனுஷ் நான்கு மாதங்களுக்கு பிறகு தற்போது மௌனம் கலைத்துள்ளார். தியேட்டர் அனுபவத்தை நெட்ப்ளிக்ஸ் அளிக்காது என்று அவர் கூறியுள்ளார். ட்ரெயிலரை பார்த்த பின்பு அவரது ரசிகர்களும் இதே கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

3 மில்லியன் வியூக்கள்

3 மில்லியன் வியூக்கள்

இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் வெளியான 6 மணிநேரங்களில் 3 மில்லியன் வியூக்களை தாண்டி சாதனை புரிந்துள்ளது. தொடர்ந்து ரசிகர்கள் ட்ரெயிலரை பார்த்து வருகின்றனர். படம் கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போனது. தற்போது நெட்ப்ளிக்சில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X