ஜகமே தந்திரம் ‘நேத்து’ பாட்டு எப்படி இருக்கு? தனுஷ் கடைசி வரை முத்தம் கொடுத்தாரா இல்லையா?
சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்தின் 'நேத்து' பாடலின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
பேட்ட படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜகமே தந்திரம்.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வரும் ஜூன் 18ம் தேதி வெளியாகிறது.

சநா இசையில்
கர்ணன் படத்தை தொடர்ந்து தனுஷின் ஜகமே தந்திரம் படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பாளர். ஏற்கனவே வெளியான ரகிட ரகிட மற்றும் புஜ்ஜி என இரு பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இந்நிலையில், 'நேத்து' பாடலை இன்று வெளியிட்டுள்ளனர்.

முன்னதாகவே லீக்
தனுஷ் குரலில் உருவாகி உள்ள இந்த பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னதாகவே சமூக வலைதளங்களில் 'நேத்து' பாடல் வீடியோ லீக் ஆகி விட்டது. அதன் காரணமாக உடனடியாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் பாடலை வெளியிட்டு விட்டனர்.

தனுஷ் குரலில்
கர்ணன் படத்தில் 'தட்டான் தட்டான்' பாடலை பாடி இருந்த நடிகர் தனுஷ், ஜகமே தந்திரம் படத்தில் ரகிட ரகிட பாடலை பாடியிருந்தார். மேலும், தற்போது வெளியாகி உள்ள ரொமான்டிக் பாடலான 'நேத்து' பாடலையும் நடிகர் தனுஷே தனது மாயக் குரலால் பாடி உள்ளார். வீடியோ பாடல் என்பதால், தனுஷை ஃபிரேம் பை ஃபிரேம் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

க்யூட் ஐஸ்
புஜ்ஜி பாடலிலேயே ஐஸ்வர்யா லக்ஷ்மியை காட்டவில்லையே என ஏங்கிய ரசிகர்களுக்கு இந்த பாடல் செம ட்ரீட்டாக அமைந்துள்ளது. மேலும், பாடல் முழுக்க அவர் கொடுக்கும் செம க்யூட் எக்ஸ்பிரஷன்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. பொன்னியின் செல்வன் படத்தில் படகோட்டி பெண்ணாகவும் இவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எப்படி இருக்கு நேத்து
சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் குரலில் வெளியாகி உள்ள இந்த ரொமான்டிக் பாடல் விஷுவலாக சூப்பராகவே உள்ளது. ஆனால், பாடலாக கேட்கும் போது ஏற்கனவே தனுஷ் பாடிய பல பாடல்கள் நினைவுக்கு வருகிறது. குறிப்பாக வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் "போ இன்று நீயாக" பாடலில் "இது சாரக் காத்து.. என் பக்கம் பார்த்து" வரிகள் போலவே பாடல் உள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஸ்லோ பாய்ஸன்
முதன்முறை கேட்ட உடனே இந்த பாடல் பலருக்கும் பெரிய ஈர்ப்பை கொடுக்கவில்லை என்பதற்கு சாட்சியாக ஏகப்பட்ட தனுஷ் ரசிகர்களே, இது ஒரு ஸ்லோ பாய்ஸன் சாங்காகத் தான் இருக்கும், திரும்ப திரும்ப கேட்க கேட்க பிடித்துப் போகிறது என பதிவிட்டு வருவதை பார்க்க முடிகிறது.

முத்தம் கொடுத்தாரா
லண்டனில் மதுரைக் கார இளைஞன் தனது காதலியை பார்த்து பாடும் பாடலாகவே இந்த பாட்டு உள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் முத்தக் காட்சிகளை பார்க்கும் தனுஷ், நாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு முத்தம் கொடுக்க பாடல் முழுவதும் முயற்சித்துக் கொண்டே இருக்கும்படியாக படம் ஆக்கப்பட்டுள்ளது. கடைசி வரை கொடுக்காமலே பாடல் முடிவடைந்து ரசிகர்களை ஏமாற்றி உள்ளது. படத்தில் பார்த்துக் கொள்ளலாம் வெயிட் பண்ணுங்க!


Click it and Unblock the Notifications











