தியேட்டரில் தான் ரகிட ரகிட ரகிட.. ஜகமே தந்திரம் ஒடிடி ரிலீஸ் கிடையாது.. சொன்னது யாரு தெரியுமா?

சென்னை: நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படமும் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்ற வதந்தியை படக்குழு மறுத்துள்ளனர்.

Recommended Video

Dhanush மதுரை Gangster எனக்கு Villain • James Cosmo Interview | Karthick Subbaraj

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகிறது என்ற தகவலை தொடர்ந்து, தனுஷின் ஜகமே தந்திரம் படமும் ஆன்லைனில் ரிலீசாகப் போவதாக தகவல்கள் தீயாய் பரவின.

ஆனால், தனுஷ் ரசிகர்கள் தனுஷின் தரிசனத்தை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என #WeWantJTOnTheatres என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

முன் வரும் தயாரிப்பாளர்கள்

முன் வரும் தயாரிப்பாளர்கள்

சூர்யாவின் சூரரைப் போற்று அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் சூர்யா வெளியிட்டதில் இருந்து பல தயாரிப்பாளர்களும், தங்கள் திரைப்படங்களை ஒடிடி தளங்களுக்கு விற்பனை செய்ய முன் வரத் தொடங்கி உள்ளனர்.

இந்த படங்களும் ஓடிடியில் தான்

இந்த படங்களும் ஓடிடியில் தான்

சூரரைப் போற்று அறிவிப்பு வந்த உடனே அடுத்து தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் ஒடிடியில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்தது. மேலும், தனுஷின் ஜகமே தந்திரம், ஜெயம் ரவியின் பூமி, விஜய்சேதுபதியின் லாபம், சந்தானத்தின் பிஸ்கோத் மற்றும் டிக்கிலோனா உள்ளிட்ட படங்களும் நேரடியாக ஆன்லைனில் வெளியாகும் என்ற தகவல் வைரலாக தொடங்கின.

ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பு

சூரரைப் போற்று ஆன்லைனில் வெளியாகும் என்ற அறிவிப்பு சூர்யா ரசிகர்களையே சோகத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், ஜகமே தந்திரம் படம் ஒடிடியில் ரிலீஸ் என்ற தகவல் வைரலான நிலையில், தனுஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்க தொடங்கி விட்டனர். மேலும், #WeWantJTOnTheatres

தியேட்டரில் தான்

தியேட்டரில் தான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்தை தயாரித்து வரும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த், ஜகமே தந்திரம் படத்தை ஒடிடியில் வெளியிட தாங்கள் முடிவு ஏதும் செய்யவில்லை என்றும், இந்த ஜகம் குணமடைந்த பின்னரே ஜகமே தந்திரம் ரிலீசாகும் என்ற சந்தோஷமான அப்டேட்டை கொடுத்துள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ரகிட ரகிட ரகிட போட வைத்துள்ளது.

இது போதும் தலைவா

இது போதும் தலைவா

நடிகர் தனுஷின் ரசிகர்கள் கோரிக்கையை தொடர்ந்து தயாரிபாளர் சசிகாந்த் கொடுத்துள்ள இந்த விளக்கத்தை பார்த்த ரசிகர்கள், "இது போதும் தலைவா.. எத்தனை நாள் ஆனாலும், வெயிட் பண்ணி தலைவனை தியேட்டரில் பார்க்கிறோம்" என ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். மேலும், முடிஞ்சா கொஞ்சம் சீக்கிரம் டீசர் அல்லது டிரைலரை விடுங்க எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X