ஜகமே தந்திரம் 2வா?… வேணாம், வலிக்கிது,அழுதுடுவேன்… கார்த்திக் சுப்புராஜை வெச்சி செய்யும் நெட்டிசன்ஸ் !
சென்னை : ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸ் இணைத்தில் வெளியாகி அனைவரிடத்திலும் பல நெகட்டிவ் கமெண்ட்டுகள் வர ஆரம்பித்து விட்டன.
Recommended Video
முதலில் மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ் தற்போது நேரடியாக கோதாவில் இருந்து கார்த்திக் சுப்புராஜை வச்சி செய்துள்ளனர்.
படத்தின் க்ளைமாக்ஸ்ல பார்ட் 2 வர மாதிரி வசனம் இருப்பதால் ரசிகர்கள் மிகவும் கடுப்பாகி உள்ளனர்.

ஏமாற்றம்
ஜகமே தந்திரம் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, வடிவுகரசி, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார். இந்த படம் எப்போ வரும்னு பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை இப்படம் தந்துந்துள்ளது.

செட்டாகல
இதனால் கடுப்பான நெட்சன்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் வாய்க்கு வந்ததை பேசிய வருகின்றனர். அசுரன், கர்ணன் என்ற மாஸ் திரைப்படத்தை கொடுத்த உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு திரைப்படத்தை எதிர்பார்க்கல என்றும், அதான் உங்களுக்கு கேங்ஸ்டார் திரைப்படம் செட் ஆகலனு தெரியுதுல திரும்ப திரும்ப அப்படிப்பட்ட படங்களில் நடிக்கிறீங்க தனுஷ் என்று அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

சொதப்பல்
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி இப்படி தரமான திரைப்படத்தை இயக்கிய நீங்க ஜகமே தந்திரம் திரைக்கதையில் சொதப்பி இருக்கீங்க. மதுரை தாதா, லண்டன் தாதா, இலங்கை குண்டு வெடிப்பு, அகதிகள் புலம்பெயர்தல் என எல்லாத்தையும் சொல்லி கடைசியில ஒன்னுமே புரியல ஏன் இப்படி.

பார்ட் 2 வருமா?
படத்தின் ரிலீஸுக்கு முன்னாடி தனுஷ் அவர்கள் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு நன்றி கூறி ஒரு ட்விட் போட்டு இருந்தாரு. அதில் ஜகமே தந்திரம் பார்ட் 2 கட்டாயம் எடுக்கணும் அதில் நானே நடிக்கனும் சொல்லி இருந்தாரும். இதற்கு கார்த்திக் சுப்புராஜூம் நிச்சயம் பார்ட் 2 வரும்னு சொல்லி இருந்தாரு.

கலாய்த்த ரசிகர்கள்
ஜகமே தந்திரம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியிலையும் பார்ட்2 வர மாதிரி ஒரு வசனம் வேற வருது,போர் ஆரம்பிக்க மட்டும் தான் முடியுமாம், அவன் வேற திரும்பி வருவானாம் என்று. அப்போ... செகண்ட் பார்ட் வேற வருதா? வேண்டாம் சாமி... நாங்க பாவம் எங்கள விட்டுடுங்க... வேணா... வலிக்கிது... அழுதுடுவேன் என்று வடிவேல் பாணியில் கார்த்திக் சுப்புராஜை சரமாரியா கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.


Click it and Unblock the Notifications











