அ’டெக்’கொடுமையே.. ஜகமே தந்திரம் இயக்குநர் ட்வீட்டிலேயே தைரியமாக பைரசி லிங்கை வெளியிட்ட விஷமிகள்!

சென்னை: ஜகமே தந்திரம் பைரசி லிங்கும் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

படம் ஆரம்பித்த பத்தே நிமிடத்தில் ஜகமே தந்திரம் படத்தின் ஹெச்.டி. தர திருட்டு பிரின்ட் டெலிகிராமில் வெளியாகி விட்டது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 12.30 மணிக்கு படம் வெளியாகி விட்டது என போட்ட ட்வீட்டுக்கு கீழே அந்த லிங்கை நெட்டிசன்கள் ஷேர் செய்துள்ளது ஹைடெக் காலக் கொடுமை.

வெளியானது ஜகமே தந்திரம்

வெளியானது ஜகமே தந்திரம்

17 மொழிகள், 190 நாடுகள் என நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படம் வெள்ளிக்கிழமை 12.30 மணிக்கு (இந்திய நேரப்படி) வெளியானது. தனுஷ் ரசிகர்கள் இதற்காகவே நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

இனி இது உங்களுடையது

இனி இது உங்களுடையது

சரியாக நண்பகல் 12.30 மணிக்கு ஜகமே தந்திரம் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியான சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும், இனி இந்த படம் உங்களுடையது என்றும் ட்வீட் போட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.

லிங்க் வந்துடுச்சா

லிங்க் வந்துடுச்சா

ஜகமே தந்திரம் இயக்குநர் என்றும் பாராமல் அவரிடமே டெலிகிராம் லிங்க் வந்துடுச்சா என்றும், யாராவது டெலிகிராம் லிங்க் இருந்தா கொடுங்க என்றும், நெட்பிளிக்ஸ் ஐடியை ஷேர் பண்ணுங்க கார்த்திக் என்றும் கமெண்ட்டுகள் குவிந்தன.

திருட்டு லிங்க்

திருட்டு லிங்க்

இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் இந்தாங்க ஜகமே தந்திரம் டெலிகிராம் லிங்க் என படம் வெளியாகி சில நிமிடங்களிலேயே சுடச்சுட திருட்டு லிங்கை இயக்குநர் ட்வீட்டுக்கு கீழே ஷேர் செய்துள்ள காலக்கொடுமை அரங்கேறி இருக்கிறது.

ஹெச்.டி. தரத்தில்

ஹெச்.டி. தரத்தில்

ஒடிடியில் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் வெளியானால் அடுத்த சில நிமிடங்களிலேயே அதன் பைரசி பிரின்ட் ஹெச்.டி. தரத்தில் வெளியாகி விடுகிறது. ஆனால், அதை இப்படி வெட்ட வெளிச்சமாக சம்பந்தப்பட்ட நபர்களின் ட்வீட்டுக்கு கீழே பகிரங்கமாக போடும் அளவுக்கு சைபர் கிரைம் பெருகி இருப்பது ஹைடெக் காலக் கொடுமை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X