தனுஷ் ரசிகர்களுக்கு தக தக அறிவிப்பு... ஜகமே தந்திரம் ஜூன் 18ல்.. நெட்பிளிக்ஸில் ரிலீஸ்!
சென்னை : தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் ஒடிடி தளத்தில் ஜூன் 18ந் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நல்ல வரவேற்பு
தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அனைவரின் பாராட்டுக்களை பெற்றது. தனுஷின் அடுத்த படமான ஜகமே தந்திரம் வெளியீடுக்குறித்து அவ்வப்போது தகவல்கள் கசிந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என கூறிவந்தார்.

திரையரங்குகள் மூடல்
இந்நிலையில், இந்தியாவின் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் ஷாப்பில் மால்கள், திரையரங்குகள் மூட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் என புதுபுது கட்டுப்பாடுகள் மத்திய மாநில அரசுகள் பிறப்பித்து வருகின்றன.

ஜூன் 18ந் தேதி ரிலீஸ்
இந்நிலையில், ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் இரண்டாம் வாரம் அதாவது ஜூன் 18ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை வொய் நாட் ஸ்டியோஸ் நிறுவனம் மற்றம் ரிலையன்ஸ் என்டெர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

சோகத்தில்
இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் பிரல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஐகமே தந்திரம் ஒடிடியில் வெளியாக உள்ளதால் தனுஷ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











