பிகே பீட்ஸ்.. தளபதி 65 படத்தோட பேரு பீஸ்ட்.. இன்றைய டாப் 5 வைரல் சினிமா பீட்ஸ்!

சென்னை: நம்ம பிகேவின் அடுத்த டாப் 5 பீட்ஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது.

Jagame Thandhiram to Beast first look: PK top 5 beats!

ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் முதல் தளபதி விஜய்யின் பீஸ்ட் பட ஃபர்ஸ்ட் லுக் வரை ஏகப்பட்ட சினிமா அப்டேட்களை அடுக்கிக் கொண்டு வந்து இருக்கிறார்.

தனுஷின் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விமர்சகர்கள் அந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கொடுத்து வருவதை முதல் பீட்டாக சொல்லி உள்ளார்.

Recommended Video

பீகே பீட்ஸ்.. தளபதி 65 படத்தோட பேரு பீஸ்ட்.. இன்றைய டாப் 5 வைரல் சினிமா பீட்ஸ்!

நடிகை சமந்தா அமேசான் பிரைமில் வெளியான தி ஃபேமிலி மேன் 2வில் நடித்த நிலையில், நெட்பிளிக்ஸில் உருவாகும் புதிய வெப் தொடர் அழைப்பை வேண்டாம் என நிராகரித்துள்ளாராம்.

நடிகர் மோகன்லாலின் பிரம்மாண்ட திரைப்படமான மரைக்காயர் - அரபிக் கடலின் சிங்கம் திரைப்படம் வரும் ஓணம் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ராம்சரணை வைத்து இயக்குநர் ஷங்கர் இயக்கவுள்ள பிரம்மாண்ட படத்திற்கு ஆலியா பட், மாளவிகா மோகனன் பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது கியாரா அத்வானி தான் கன்ஃபார்ம் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக போடப்பட்ட லாக்டவுன் சினிமா தொழிலை முற்றிலுமாக முடக்கியது. இந்நிலையில், 100 நபர்களுடன் சினிமா படப்பிடிப்பை நடத்தலாம் என தற்போது அனுமதியளித்த தமிழக அரசுக்கு சினிமா துறையினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்த டாப் 5 பீட்ஸ் உடன் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்பது போல தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் பற்றியும் பிகே அவரது ஸ்டைலில் பேசியுள்ள ஜாலியான வீடியோவை கண்டு ரசியுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X