என்னடா பப்ஜி மதனோடலாம் வச்சி ஓட்டுறீங்க.. ஜகமே தந்திரம் படத்துக்கு வந்த சோதனை.. தெறிக்கும் மீம்ஸ்!

சென்னை: ஜகமே தந்திரம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், அந்த படத்தையும் அதில் நடித்த நடிகர் தனுஷையும் வைத்து சமூக வலைதளங்களில் மீம்களை போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Recommended Video

Jagame Thandhiram Movie Time | படம் பேசும் நிஜம் | Dhanush, Joju George, James Cosmo

எந்தவொரு லாஜிக்கும் இல்லாமல் படம் இருப்பதாகவும், லண்டனுக்கெல்லாம் போய் தயாரிப்பாளர் பணத்தை கரியாக்கியது தான் மிச்சம் என்றும் பயங்கரமாக ஓட்டி வருகின்றனர்.

சமீபத்தில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதனை எல்லாம் வைத்து கலாய்த்திருப்பது மரண சம்பவம்.

கார்த்திக் சுப்புராஜ் படங்கள்

கார்த்திக் சுப்புராஜ் படங்கள்

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படங்களை இயக்கி பிரபலமான கார்த்திக் சுப்புராஜ் விஜய்சேதுபதி நடிப்பில் பீட்சா எனும் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். பீட்சா மற்றும் ஜிகர்தண்டா படங்கள் மட்டுமே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்களில் நல்லா இருந்ததாகவும் பேட்ட, ஜகமே தந்திரம் எல்லாம் காமெடி பீஸ் என்றும் டிராகன்களை வைத்து கலாய்த்துள்ளனர்.

சோலிய முடிச்சிட்டானுங்க

சோலிய முடிச்சிட்டானுங்க

என்னோட நிலைமைய பார்த்தீங்களா சார்.. என்னை தோற்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே.. அட அவனும் இங்க நான் தானே சொல்லி என்னோட சோலிய முடிச்சிட்டானுங்க என நெட்பிளிக்ஸ் நிறுவனமே புலம்பவது போல அதகளம் பண்ணி உள்ளனர்.

வெற்றிமாறன் இல்லைன்னா

வெற்றிமாறன் இல்லைன்னா

தனுஷ் வித்தவுட் வெற்றிமாறன் என டம்மி தனுஷ் போட்டோவை போட்டு அலப்பறையை கூட்டி உள்ளனர். இயக்குநர் வெற்றிமாறன் படங்களில் நடிக்கும் தனுஷுக்கு தேசிய விருதுகளும் பாராட்டுக்களும் குவிகின்றன. மற்ற இயக்குநர் படங்களில் தனுஷ் நடித்தால் ட்ரோல்கள் தான் மிஞ்சுகின்றன.

ஆட்டோக்கார தம்பி

ஆட்டோக்கார தம்பி

ஜகமே தந்திரம் படத்தால் நல்லா அடிவாங்கிய தனுஷ், எங்கே நம்ம ஆட்டோக்கார தம்பிய காணோம் என இயக்குநர் வெற்றிமாறனை தேடுவது போல இருக்கும் இந்த மீம் சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

தியேட்டர் ஓனர்கள்

தியேட்டர் ஓனர்கள்

நல்லவேளை இந்த படம் தியேட்டரில் வரலை என தியேட்டர் ஓனர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எல்லாம் ரொம்ப ஹேப்பியாக இருப்பது போல இந்த மீமை போட்டு அந்தர் பண்ணி உள்ளனர். என்னவொரு சத்யசோதனை தனுஷ்.

ஹெல்ப் அஸ்

ஹெல்ப் அஸ்

ஜகமே தந்திரம் டைட்டிலுக்கு கீழே.. ஹெல்ப் அஸ் ப்ளீஸ் என்கிற சப் டைட்டிலை பார்த்த ரசிகர்கள்.. இந்த சப் டைட்டிலை பார்த்த உடனே நினைச்சேன். என்னமோ இடிக்குதேன்னு என கலாய்த்து வருகின்றனர்.

60 கெட்டப்

60 கெட்டப்

இது மாதிரி சியான் 60ல ஏதாவது ஆச்சு என விக்ரம் கார்த்திக் சுப்புராஜை கார்னர் பண்ண.. உங்களுக்கு அதுல 60 கெட்டப் இருக்கு என சொல்லி விக்ரமையே கார்த்திக் சுப்புராஜ் ஏமாற்றி விடுவதாக இந்த மீம் தெறிக்கிறது.

சியான் 60 எடுப்பேன்

சியான் 60 எடுப்பேன்

விமர்சனங்கள், மீம்கள், ட்ரோல்கள் கழுவி கழுவி ஊற்றினாலும்.. கார்த்திக் சுப்புராஜின் நிலைமை இந்த மீம் போலத்தான் இருக்கும் என மீம் கிரியேட்டர்கள் உண்மையைக் கூறியுள்ளனர். ஏ.. என்ன வேணா நடக்கட்டும் நான் சியான் 60 எடுப்பேன்!

ஜிபி முத்து

ஜிபி முத்து

பேட்ட வேலன் கெட்டப்பில் தனுஷின் சுருளி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பதை பார்த்து அய்யா.. மனோ பாலா அய்யா என கலாய்த்து மீம்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், ஜிபி முத்து தனுஷின் இந்த கெட்டப்பை பார்த்து சிரிக்கும் போட்டோ மீமும் அட்ராசிட்டி தான்.

வா வா சோழர் பரம்பரை தாதா

வா வா சோழர் பரம்பரை தாதா

புதுப்பேட்டை படத்தின் எபிக் சீனை போட்டு.. வா வா சோழர் பரம்பரை தாதா.. லண்டன் போயிட்டு வந்துட்டியா என இயக்குநர் வெற்றிமாறன் தனுஷை பார்த்து கலாய்ப்பது போல கெத்துக் காட்டுகிறது இந்த மீம்.

பப்ஜி மதனையும் விடல

பப்ஜி மதனையும் விடல

அனைத்துக்கு உச்சமாக கடைசியாக பப்ஜி மதனையும் மீம் கிரியேட்டர்கள் விடவில்லை. ஜகமே தந்திரம் டிரைலரை பார்த்து வியந்து போன ரசிகர்கள் படத்தை பார்த்து நொந்து போனது போலத் தான் பப்ஜி மதனின் லேட்டஸ்ட் கோலத்தை பார்த்து ரசிகைகள் ஷாக் ஆகி உள்ளனர் என்று கம்பேர் பண்ணி கலங்கடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X