தனுஷின் ஜகமே தந்திரம் சென்சார் ரேட்டிங்.. வெளியான புது தகவல்
சென்னை: தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.
இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் இல்லாமல் நேரடியாக Netflix OTT தளத்தில் வெளிவரவுள்ளது.

கேங்ஸ்டர் திரைப்படம்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படம் கேங்ஸ்டர் கதைகளத்தை மையமாக கொண்டது. கேங்ஸ்டர் கதைகளை சிறப்பாக கையாள கூடிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு வேற ஒரு லெவலில் உள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்
பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த படம் OTT தளத்தில் வெளியாவது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் பெரிய விலைக்கு Netflix OTT தளம் ஜகமே தந்திரம் திரைப்படத்தை வாங்கியுள்ளது. ரிலிஸ் தேதி குறித்து ஏதும் அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

ரசிகர்கள் ஆரவாரம்
முன் அறிவிப்பு ஏதுமின்றி சமீபத்தில் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை ஆரவாரத்தில் ஆழ்த்தியது. தனுஷின் கதாபாத்திர வடிவமைப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. படத்தின் புஜ்ஜி பாடல் முன்னரே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Netflix தகவல்
இப்படம் ஒரே நேரத்தில் பல மொழிகளில் 190 நாட்களில் 204 மில்லியன் சந்தாதாரர்களை சென்றடையும் வகையில் ரிலிஸ் ஆகும் எனவும், 18 வயதிற்கு மேற்பட்டோர்க்கான படம் எனவும், படத்தின் நீளம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் எனவும் Netflix குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











