ரகிட ரகிட ரகிட.. வெளியானது ஜகமே தந்திரம் முதல் சிங்கிள் ட்ராக்.. கொண்டாடும் ரசிகாஸ்!

சென்னை: தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது.

Recommended Video

Dhanush Atrangi Re Making | Sara Ali Khan, Akshay Kumar

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் பட்டாஸ். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார்.

இந்தப் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

லாக்டவுன் காரணம்

லாக்டவுன் காரணம்

இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த ஆண்டே முடிந்துவிட்டது. கடந்த மே ஒன்றாம் தேதியான தொழிலாளர் தினத்தில் படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

ரகிட ரகிட பாடல்

ரகிட ரகிட பாடல்

இந்நிலையில் இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ரகிட ரகிட என்ற முதல் சிங்கிள் ட்ராக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் காலையில் ரகிட ரகிட பாடலை வெளியிட்டார்.

தத்துவ டிப்ஸ்

தத்துவ டிப்ஸ்

மேலும் வாழ்க்கையை எப்படி கையாள்வது என்பது குறித்த தத்துவ உதவிக்குறிப்புகளையும் இந்த பாடல் வழங்குவதாக தெரிவித்துள்ளார். அதோடு நடிகர் தனுஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

ஹேஷ்டேக்ஸ்

ஹேஷ்டேக்ஸ்

இந்த பாடல் வெளியாகி ஒரு மணிநேரத்திற்குள்ளேயே சுமார் நான்கு லட்சம் வியூஸ்களை குவித்துள்ளது. #JagameThandhiram என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. இதேபோல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் ரகிட ரகிட பாடல் லிங்கை ஷேர் செய்து நடிகர் தனுஷ்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X