ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ்? விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் !

சென்னை : சமீப காலங்களில் தமிழ் திரைப்படங்கள் ஒவ்வொன்றாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வரும் நிலையில் தமிழில் முன்னணி நடிகர்கள் நடித்து வெளிவர இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்போதுள்ள லாக்டவுன் தலைவலியால் திரையரங்குகள் முற்றிலும் மூடப்பட்டதால் தமிழில் முன்னணி நாயகிகளாக வலம் வரும் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷின் படங்கள் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகின.

இந்த நிலையில் யோகி பாபு நடித்த காக்டெய்ல் மற்றும் அருண் விஜய் நடித்த வா டீல் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்பொழுது தனுஷ் நடித்த திரைப்படமும் ஓடிடியில் வெளியாகிறது என ஒரு சிலரால் செய்திகள் பரப்பப்பட்டது.

மிகப்பெரிய நஷ்டம்

மிகப்பெரிய நஷ்டம்

கள்ளத்தனமாக வெளியாகி நஷ்டத்தை ஏற்படுத்துகிறது தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல நிலைகளில் நமக்கு மிகவும் உதவியாக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் அது நமக்கு ஆபத்தாகவே சென்று முடிகிறது. அந்த வகையில் தற்போது உள்ள சூழலில் பல படங்கள் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே கள்ளத்தனமாக பல இணைய தளங்களில் வெளியாகி திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

நல்ல கதைகளை

நல்ல கதைகளை

எனினும் முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் திரையில் வெளியாகி அவர்களின் பல கோடி ரசிகர்களின் பேராதரவால் வசூலை குவித்து வரும் நிலையில் பல நல்ல கதைகளை கொண்டு வெளியாகும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் இன்றும் தியேட்டர்கள் கிடைக்காமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

முற்றிலும் முடங்கியுள்ளது

முற்றிலும் முடங்கியுள்ளது

உலகம் முழுவதும் தற்போது அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு வேலைகளும் செயல்பட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் திரைத்துறையைச் சேர்ந்த பல வேலைகளும் படப்பிடிப்புகளும் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் திரையரங்குகளும் பல மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் பல திரைப்படங்கள் வெளியிடப்படாமல் அப்படியே தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஓடிடி தளத்திலா

ஓடிடி தளத்திலா

தேக்கி வைக்கப்பட்டுள்ள பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களும் அடங்கியுள்ளதால் அந்த படங்கள் தியேட்டரில் வெளியாகுமா இல்லை ஓடிடி தளங்களில் வெளியாகுமா என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஓடிடி தளங்களை நாடியுள்ளது

ஓடிடி தளங்களை நாடியுள்ளது

திரையரங்குகளை திறக்க இன்னும் பல மாதங்கள் ஆகும் என சொல்லப்பட்டு வரும் நிலை இந்தியாவில் பல மொழித் திரைப்படங்களும் தற்பொழுது ஓடிடி தளங்களை நாடியுள்ளது. அந்தவகையில் தமிழில் ஏற்கனவே பொன்மகள் வந்தாள், மற்றும் பெண்குயின் போன்ற திரைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது யோகி பாபுவின் காக்டெய்ல் மற்றும் அருண்விஜயின் வா-டீல் போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது

வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது

அதேசமயம் தமிழில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாஸ்டர், ஜகமே தந்திரம், சூரரைப் போற்று போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகிறது என அவ்வப்போது வதந்திகளை பரப்பி வரும் நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஜகமே திரைப்படம் ஒரு சில பிரச்சனைகளால் ஓடிடியில் வெளியாகிறது என ஒரு சிலரால் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை

பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை

இதை கேள்விப்பட்ட ஓடிடி விநியோகிஸ்தர்கள் ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவல் முற்றிலும் பொய்யான தகவல் எனவும், ஜகமே தந்திரம் படக்குழு ஓடிடியில் வெளியிடுவதைப் பற்றி இன்னும் எங்களுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

ஓட ஓட விரட்டி

ஓட ஓட விரட்டி

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல் யாரும் இதை நம்ப வேண்டாம் என ஓடிடி தளத்தைச் சேர்ந்த அதிகாரப்பூர்வ குழுக்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவ்வாறு பொய்யான வதந்திகளை பரப்பிய அந்த நபர்களை தனுஷின் ரசிகர்கள் கேள்விகளால் துளைத்து எடுத்தும் கண்டபடி திட்டி தீர்த்தும் அந்த பொய்யான தகவலை பரப்பிய நபர்களை ஓட ஓட விரட்டி வருகின்றனர்.

எப்போது வெளியாகும்

எப்போது வெளியாகும்

வதந்திகளை பரப்பிய அந்த நபர்களை ஓட ஓட விரட்டிய தனுஷின் தீவிர ரசிகர்கள் ஜகமே தந்திரம் திரைப்படத்தை நாங்கள் கண்டிப்பாக தியேட்டரில் தான் பார்ப்போம், அது எவ்வளவு நாட்கள் ஆனாலும் சரி நாங்கள் காத்திருந்து இந்த படத்தை தியேட்டரில் தான் பார்ப்போம் என உறுதியாக சொல்லி வருகின்றனர். மேலும் ஜகமே தந்திரம் தியேட்டரில் எப்போது வெளியாகும் என எந்த ஒரு தகவலும் படக்குழுவிடம் இருந்து இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X