அடக்கடவுளே.. லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. பேட்டி ஒன்றில் போட்டுடைத்த பிரபல நடிகர்!
சென்னை: தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் கதையை பிரபல ஹாலிவுட் நடிகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜகமே தந்திரம்.
மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாஸ்டர், சூரரைப் போற்று, பூமி படத்தை போல ரிலீசாகாமல் தியேட்டர்கள் திறப்புக்காக காத்திருக்கிறது.

கேங்க்ஸ்டர் படம்
ஜிகர்தண்டா, பேட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு கேங்ஸ்டர் படத்தை தனுஷை வைத்து இயக்கி உள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். கடா மீசை வைத்து சுருளி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சிங்கிளா டபுளா?
ஜகமே தந்திரம் படத்தில் நடிகர் தனுஷ் சிங்கிள் ரோலில் நடிக்கிறாரா? அல்லது பட்டாஸ் படத்தை போல அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்து இருக்கிறது. மதுரை பேக்ட்ராப்பில் மீசை வைத்த கெட்டப், லண்டனில் கேங்ஸ்டர் லுக் இதனால் தான் ரசிகர்களுக்கு இப்படியொரு குழப்பம்.

நார்னியா பட நடிகர்
தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ நடித்துள்ளார். பிளாக்பஸ்டர் ஹாலிவுட் திரைப்படங்களான பிரேவ் ஹார்ட், ட்ராய் மற்றும் நார்னியா உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். லண்டனில் மிகப்பெரிய கேங்ஸ்டராக இருக்கும் இவருக்கும் தனுஷுக்கும் இடையே தான் மோதல் என கூறப்படுகிறது.

லீக்கான கதை
சமீபத்தில் TOIக்கு இவர் அளித்த பிரத்யேக பேட்டியில், ஜகமே தந்திரம் படத்தின் மையக்கருவை ஓப்பன் செய்துள்ளார். லண்டனில் இந்தியர்களால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க பிரபல கேங்ஸ்டரான ஜேம்ஸ் காஸ்மோ, இந்தியாவில் லோக்கல் தாதாவாக வலம் வரும் நடிகர் தனுஷை வேலை அமர்த்துவதாகவும், ஆனால், அவருக்கே இவர் வில்லனாக எப்படி மாறுகிறார் என்பது தான் கதை என்பது தற்போது கசிந்து இருக்கிறது.

மேஜிக் இருக்கும்
ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ ஜகமே தந்திரம் படத்தின் மையக் கதையை ரிவீல் செய்து இருந்தாலும், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷின் மேஜிக் பல இடங்களில் இந்த படத்தில் ஒர்க்கவுட் ஆகி வேற லெவலில் வெற்றியைக் கொடுக்கும் என்றே ரசிகர்கள் கருதி வருகின்றனர். கொரோனா எப்போது ஒழியும், லாக்டவுன் எப்போது முடியும், என்பதை தான் ஒட்டுமொத்த மக்களும் சினிமா துறையினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











