ஜகமே தந்திரம்தொடர்ச்சியாக பாடல்களை வெளியிட ஜகமே தந்திரம் படக்குழு திட்டம்.. ரசிகர்கள் ஆர்வம்!

சென்னை: தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.

இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் இல்லாமல் நேரடியாக Netflix OTT தளத்தில் ஜூன் 18ம் தேதி வெளிவரவுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

கேங்ஸ்டர் கதைகளத்தை மையமாக கொண்ட படம் என்பதால் இந்த படத்தை தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக யாரும் எதிர்பாராத வகையில் பெரிய விலைக்கு தயாரிப்பு நிறுவனம் படத்தை Netflix OTT தளத்திற்கு விற்றது.

சரியான முடிவு

சரியான முடிவு

கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டை மீறி பரவி வரும் நிலையில் பல திரைப்படங்கள் பின் வாங்க தொடங்கின. கொரோனா இரண்டாம் அலையின் விளைவாக மீண்டும் திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலில் OTT ரிலிஸ் ஏமாற்றத்தை அளித்தாலும் தற்போது உள்ள நிலைமைக்கு சரியான முடிவாக தெரிகிறது.

வேற லெவல் வரவேற்பு

வேற லெவல் வரவேற்பு


இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜகமே தந்திரம் படக்குழு படத்தின் டீசரை வெளியிட்டது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பை பெற்றது.
தனுஷின் கதாபாத்திரம் டீசரில் ரசிக்கும் படியாக இருந்தது மட்டுமன்றி டீசர் யூ டியூபில் வைரலானது.

படக்குழு திட்டம்

படக்குழு திட்டம்

டீசர் தவிர்த்து ரகிட்ட ரகிட்ட, புஜ்ஜி என இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் மீதமுள்ள பாடல்களை படக்குழு இந்த வாரம் முதல் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெளியிடவுள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு கூடிய விரைவில் வெளியிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X