For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜகமே தந்திரத்தின் OTT மந்திரம் ... பலிக்குமா ? ஒரு அலசல்

  |

  சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று Netflix ல் வெளியாகியுள்ள படம் ஜகமே தந்திரம்.

  இந்த படத்தில் தனுஷடன் ஐஸ்வர்யா லக்ஷ்மி, சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

  நான் போற்றும் இயக்குநர்களில் ஒருவர்.. அவரது படத்தில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.. தனுஷ் பளீச்! நான் போற்றும் இயக்குநர்களில் ஒருவர்.. அவரது படத்தில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.. தனுஷ் பளீச்!

  மிக பெரிய எதிர்பார்புகளுக்கு இடையில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

  படத்தின் கதைக்களம்

  படத்தின் கதைக்களம்

  நாடு விட்டு நாடு சென்று அகதிகளாக போராடும் மனிதர்களின் வாழ்க்கையை பல் வேறு கோணங்களில் சிந்திக்க வைத்து, வெளிநாடுகளில் நடந்த நடக்கின்ற பல உண்மை சம்பவங்களை காட்சிகளாக சிறந்த இசையுடன் உணர்வுபூர்வமாக தந்து உள்ளார் கார்த்திக் சுப்புராஜ் .

  மைல்கல்லாக இருக்கும்

  மைல்கல்லாக இருக்கும்

  கேங்ஸ்டர் படங்களை விரும்பி இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தையும் மிகவும் ரசித்து இயக்கி இருக்கிறார். இதில் தமிழ் ஈழம் சார்ந்த அரசியலையும் கார்த்திக் சுப்புராஜ் இணைத்துள்ளார். சமீபத்திய நேர்காணல்களில் கார்த்திக் சுப்புராஜ் கூறியது போல ஜகமே தந்திரம் அவரது படங்களில் ஒரு பெரிய மைல்கல்லாக இருக்கும். கதையில் வரும் முக்கிய கதாபாத்திரங்களின் வடிவமைப்பை மிகவும் சரியாக கையாண்டுள்ளார். அந்த அளவிற்கு தெளிவாக கதையை வடிவமைத்துள்ளார்.Netflix OTT தளத்துடன் கைகோர்த்ததன் மூலம், கனவு தயாரிப்பான ‘ஜகமே தந்திரம்' இன்று 17 மொழிகளில். 190 நாடுகளில், 200 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை சென்றடைந்து வருகிறது

  சுருளியாக தனுஷ்

  சுருளியாக தனுஷ்

  வழக்கம் போலவே தனுஷ் மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளார். படத்திற்கு படம் அவருடைய எதார்த்தமான நடிப்பு வளர்ந்து கொண்டே போவது வியக்க வைக்கிறது. இந்த படத்தில் வரும் தனுஷின் கதாபாத்திரம் ஒரு வில்லனாகவும், ஹீரோவாகவும், நண்பனாகவும் , துரோகியாக என்று பல சூழலை மிகவும் அற்புதமாக உள்வாங்கி சிறப்பித்து உள்ளார்

  வெள்ளைக்காரன்

  வெள்ளைக்காரன்

  ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ இவர்கள் இருவரும் இந்த படத்தின் மிக முக்கியமான இரு துருவங்கள் . இவர்கள் இருவருக்கும் இடையில் சுருளியாக தனுஷின் கதாபாத்திரம் பல மடங்கு வேட்டை ஆடுகிறது .ஜோஜு ஜார்ஜ்- சிவதாஸ் எனும் கதாபாத்திரத்தில் லண்டன் வாழும் அகதிகளை காப்பாற்றும் போராளி .இனவெறி பிடித்த ஒரு அரக்கனாக பீட்டர் எனும் கதாபாத்திரத்தில் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு racist செய்யும் அத்தனை அராஜகங்களையும் அலட்டி கொள்ளாமல் அற்புதமாக அட்டாக் செய்து உள்ளார் . அடிமைதனம், துரோகம் ,தேசப்பற்று ,போராட்டம் இவை அனைத்தையும் நாம் பல படங்களில் பார்த்து விட்ட காரணத்தினால் சில இடங்களில் அலுப்பு தட்டுகிறது. மாதவன் நடிப்பில் மௌலியின் இயக்கத்தில் வந்த நளதமயந்தி திரைப்படம் இதே பிரச்சனைகளை காமெடி கலந்து சொல்லி இருப்பார்கள் . இதில் துப்பாக்கி சத்தம் கெட்ட வார்த்தை என்று கொஞ்சம் முரட்டு தனமாக சண்டை காட்சிகள் அதிகம் கொண்ட ஒரு காங்ஸ்டர் படமாக சொல்லி உள்ளார்கள் .

  அடையாளமாக இருக்கும்

  அடையாளமாக இருக்கும்

  படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளனர். "அட்டில்லாவாக" ஒரு இலங்கை பெண்ணாக இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கிறார் . இலங்கை தமிழில் பேசிய அந்த வசனங்கள் மனதில் மிகவும் பாரமாகவும் ஒரு பக்கம் அழுத்தமாகவும் இருக்கும் . இலங்கையில் நடக்கும் போர் காட்சிகளின் போது பரிதவிப்பு ,ஏக்கம் என்று மனதை மிகவும் டிஸ்டர்ப் செய்யும் என்பது தான் உண்மை. காதல் கலந்த தேசப்பற்று ,பழி வாங்கும் எண்ணம் என்று கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்து உள்ளார்

  பாராட்டிற்குரிய

  பாராட்டிற்குரிய

  கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ் முருகேசன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் . ஒட்டு மொத்த படத்தின் கதை ஒரு வரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த முருகேசன் கதாபாத்திரம் மிகவும் எளிதாக புரிய வைக்கும் . சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் மென்மையாக நடித்து உள்ளார் .

  இசையின் பங்கு

  இசையின் பங்கு


  தொழில்நுட்ப ரீதியாக படத்தில் ஷ்ரேயாஸ்சின் ஒளிப்பதிவு லண்டன் வீதிகளையும் பல இடங்களில் மரண பீதியையும் கட்சிதமாக காட்டி உள்ளார் .விவேக்கின் படத்தொகுப்பு இன்னும் பல காட்சிகளை வெட்டி இருக்கலாம் என்றே சொல்ல வைக்கிறது . படத்திற்கு பெரும் அளவில் சந்தோஷ் நாராயணனின் இசை பக்க பலமாக இருந்துள்ளது. பின்னணி இசையில் படத்திற்கு படம் முன்னேற்றம் கண்டு மிரள வைக்கிறார்.படத்தின் வில்லனை , சுருளி (தனுஷ் ) காண செல்லும் பொது கொடுக்க பட்ட பீ.ஜீ.எம் பிளாக்கி ஜாக்கி என்னும் பாடல் செம்ம மாஸ் . மறுபக்கம் " ரகிட்ட ரகிட்ட" பாடல் ரசிகர்கள் மகிழ்ச்சி. அங்காங்கே வரும் ஒப்பாரி பாடல்கள் படத்தின் தன்மையை மெல்லிய கோட்டிற்கு எடுத்து செல்கிறது .

  அங்கிககாரம் இல்லாத

  அங்கிககாரம் இல்லாத

  திரையரங்குகளில் வெளியாகவில்லை என்ற வருத்தம் ரசிகர்கள் மனதில் ஒரு புறம் உறுத்தலாகவே இருக்கும். சூழ்நிலையை கருத்திற்கொண்டு படம் OTT யில் வெளிவந்துள்ளது பாரட்டிற்குரியது.பல்வேறு தடைகளை தாண்டி இந்த கனவு படத்தை படக்குழுவினர் இன்று நிஜமாக்கியுள்ளனர். சில பல குறைகள் இருந்தாலும் வெளிநாடு வாழும் அங்கிககாரம் இல்லாத மனித வாழ்க்கையை நமக்கு புரிய வைக்க எடுத்து கொண்ட மெனக்கெடல் பாராட்டுக்கு உரியது . கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து இந்த படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜகமே தந்திரம் ஒரு வழியாக ஒடிடி தளத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் புது வகையான பல மீம்ஸ் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் . நெட்டபிலிக்ஸ் கொஞ்சம் காஸ்டலியாக இருப்பதினால் வேறு என்னவெல்லாம் வழி இருக்கிறது என்று இணையவாசிகள் புது யுக்திகள் கொண்டு டவுன்லோடு செய்து நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகின்றனர் .

  English summary
  jagamey thandiram" movie got released in netflix today and huge danush fans celebrating it and multiple comments arise in different countries with difference of opinion
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X