Yatra 2 - முதலமைச்சராக அப்படியே செட் ஆகிட்டாரே ஜீவா.. வெளியானது யாத்ரா 2 டீசர்.. ரசிகர்கள் வரவேற்பு

சென்னை: நடிகர் ஜீவா ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படமானது பிப்ரவரி 8ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த சூழலில் அப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. டீசரை பார்த்த ரசிகர்கள் ஜெகன் மோகன் ரெட்டியாக ஜீவா அப்படியே செட் ஆகிவிட்டாரே என்று கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்திய சினிமாவில் பயோபிக் எடுக்கப்படுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்கினார். அதில் கங்கனா ரணாவத் நடித்திருந்தார். அதேபோல் குயின் என்ற வெப் சீரிஸையும் கௌதம் மேனன் MX ப்ளேயருக்காக இயக்கியிருந்தார். அதில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் பல அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கும் முயற்சி நடந்துகொண்டு இருக்கிறது.

Jagan Mohan Reddy Biopic Yatra 2 Movie Teaser was out now

இந்திரா காந்தியின் எமர்ஜென்ஸியில் கங்கனா: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறில் கங்கனா ரணாவத் நடித்தது போல் இந்திரா காந்தி இந்தியா முழுவதும் அமல்ப்டுத்திய எமர்ஜென்ஸி காலக்கட்டத்தை மையப்ப்டுத்தி எமர்ஜென்ஸி படம் தற்போது உருவாகிவருகிறது. அதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துவருகிறார். பாஜக ஆதரவாளராக இருக்கும் கங்கனா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதலமைச்சர் வாழ்க்கை வரலாறு: அதேபோல் சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்ச்ர் ஸ்டாலின் தனது இளம் வயதில் அரசியலில் பட்ட கஷ்டங்கள் தொடர்பாக எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற பெயரில் கண்காட்சி நடைபெற்றது. அதனை காண்பதற்கு இயக்குர் ஏ.ஆர். முருகதாஸ்,. நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றில் எந்த நடிகர் நடிக்கப்போகிறார் என்ற விவாதங்கள் எழும்பின.

முதலமைச்சர் வாழ்க்கை வரலற்றில் ஜீவா: இந்த சூழலில் ஆந்திர முதலமைச்சராக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் ஜீவா ஜெகன் மோகன் ரெட்டியாக நடிக்கிறார். இந்த பயோபிக்கிற்கு அவர் செட் ஆவாரா என்ற கேள்வி எழுந்தது. அதேசமயம் 83 படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா படு ஸ்மார்ட்டாக நடித்திருந்தார். எனவே கண்டிப்பாக ஜெகன் மோகன் ரெட்டியாகவும் அவர் செட் ஆவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களிடையே இருந்தது.

யாத்ரா 2: இப்படத்துக்கு யாத்ரா 2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. யாத்ரா படத்தை இயக்கிய மஹி ராகவ்வே இந்தப் படத்தையும் இயக்குகிறார். இந்நிலையில் யாத்ரா 2 படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தப் படமானது ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வளர்ச்சி குறித்து பேசும்படி அமைந்திருக்கும் என்பதை டீசர் வரவேற்கிறது. ஜீவாவும் பக்காவாக நடித்திருக்கிறார்.

ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு: முன்னதாக, ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சராக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தார். அவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி "யாத்ரா" என்ற படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. மஹி ராகவ் இயக்கிய இப்படத்தில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிகர் மம்மூட்டி நடித்திருந்தார். தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. யாத்ரா 2 படமானது யாத்ரா படம் வெளியான அதே பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X