Yatra 2 Trailer - வெளியானது யாத்ரா 2 ட்ரெய்லர்.. ஜீவாவுக்கு ஒரு ஹிட் பார்சலோ?.. ரசிகர்கள் வரவேற்பு
சென்னை: இந்திய சினிமாவில் பயோபிக் எடுக்கப்படுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்கினார். அதில் கங்கனா ரணாவத் நடித்திருந்தார். அதேபோல் குயின் என்ற வெப் சீரிஸையும் கௌதம் மேனன் MX ப்ளேயருக்காக இயக்கியிருந்தார். அதில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் பல அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கும் முயற்சி நடந்துகொண்டு இருக்கிறது.
பயோபிக் எடுப்பது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரது வாழ்க்கை படமாகின்றன. தமிழில்கூட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு எடுக்கப்பட்டது. அதில் கங்கனா ரணாவத் நடித்தது போல் இந்திரா காந்தி இந்தியா முழுவதும் அமல்படுத்திய எமர்ஜென்ஸி காலக்கட்டத்தை மையப்படுத்தி எமர்ஜென்ஸி படம் தற்போது உருவாகிவருகிறது. அதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துவருகிறார்.

முதலமைச்சர் வாழ்க்கை வரலாறு: அதேபோல் கடந்த வருடம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது இளம் வயதில் அரசியலில் பட்ட கஷ்டங்கள் தொடர்பாக 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற பெயரில் கண்காட்சி நடைபெற்றது. அதனை காண்பதற்கு இயக்குர் ஏ.ஆர். முருகதாஸ்,. நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது ஸ்டாலினின் வாழ்க்கையை பயோபிக்காக எடுக்க வேண்டும் என்று முருகதாஸ் கூறினார். அதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றில் எந்த நடிகர் நடிக்கப்போகிறார் என்ற விவாதங்கள் எழும்பின.
ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு: சூழல் இப்படி இருக்க ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சராக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தார். அவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி "யாத்ரா" என்ற படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. மஹி ராகவ் இயக்கிய இப்படத்தில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிகர் மம்மூட்டி நடித்திருந்தார். தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. யாத்ரா 2 படமானது யாத்ரா படம் வெளியான அதே பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கை வரலாற்றில் ஜீவா: இந்தச் சூழலில் ஆந்திர முதலமைச்சராக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் ஜீவா ஜெகன் மோகன் ரெட்டியாக நடிக்கிறார். இந்த பயோபிக்கிற்கு அவர் செட் ஆவாரா என்ற கேள்வி எழுந்தது. அதேசமயம் 83 படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா படு ஸ்மார்ட்டாக நடித்திருந்தார். எனவே கண்டிப்பாக ஜெகன் மோகன் ரெட்டியாகவும் அவர் செட் ஆவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களிடையே இருந்தது.
யாத்ரா 2: இப்படத்துக்கு யாத்ரா 2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. யாத்ரா படத்தை இயக்கிய மஹி ராகவ்வே இந்தப் படத்தையும் இயக்குகிறார். சமீபத்தில் யாத்ரா 2 படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படமானது ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வளர்ச்சி குறித்து பேசும்படி அமைந்திருக்கும்.
ட்ரெய்லர்: இந்நிலையில் யாத்ரா 2 படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. மொத்தம் இரண்டு நிமிடங்கள் 46 நொடிகள் ஓடும் இந்த ட்ரெய்லரில் ஜீவா, மம்மூட்டி உள்ளிட்டோர் தோன்றுகின்றனர். ட்ரெய்லரை பார்க்கும்போது கண்டிப்பாக இந்தப் படம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என்பதை சொல்ல முடியும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். மேலும் ஜீவா பக்காவாக நடித்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். படமானது பிப்ரவரி 8ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











