நானே ஏமாந்து விட்டேன்.. நிலம் வாங்கும் போது நல்லா செக் பண்ணுங்க.. பிரபல வில்லன் நடிகர் பகீர்!

ஹைதராபாத்: தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெகபதி பாபு ரியல் எஸ்டேட் மோசடியில் சிக்கித் தவித்ததாக வெளிப்படையாக பேசி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தனது ரசிகர்களையும் அவர் இது தொடர்பாக எச்சரித்துள்ளார்.

சினிமா பிரபலங்கள் அந்த ஷாம்புவை போடுங்கள், இந்த சோப்பை வாங்குங்கள், சென்னைக்கு மிக அருகில் இந்த நிலத்தை வாங்கினால் உங்கள் வாழ்க்கை சொர்க்கம் ஆகிவிடும் என்றெல்லாம் டிவியில் விளம்பரங்கள் செய்வது அவர்கள் சம்பாதிக்க மட்டும் தான்.

Tollywood Cheating Pushpa 2 2

அவர்களை வைத்து அந்த நிறுவனங்கள் மக்களிடமிருந்து பணத்தை பிடுங்குகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க காரணமே இதுபோன்ற மோசடிகளில் தன்னுடைய ரசிகர்களை காவு கொடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான். சில முன்னணி நடிகர்கள் குட்கா, சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருள் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

வில்லன் நடிகர் ஜெகபதி பாபு: தெலுங்கில் ஆரம்பத்தில் ஹீரோவாக லியோ படத்துக்கு முன்பாகவே 14 ஆண்டுகளுக்கு முன்பாக ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் இன்ஸ்பிரேஷன் படமான காயம் 2 படத்தில் நடித்துள்ளார். 62 வயதாகும் ஜெகபதி பாபு ஹீரோவாகவும் வில்லனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வில்லனாக நடித்து வருகிறார். விஜய் நடித்த பைரவா, அஜித் நடித்த விஸ்வாசம், ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் ஜெகபதி பாபு நடித்துள்ளார்.

ஏகப்பட்ட விளம்பரங்கள்: தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகர்கள் விளம்பரங்களில் நடிப்பதை அதிகமாக தவிர்த்து வருகின்றனர். அப்படியே நடித்தாலும் சமூக அக்கறையுடன் சில விளம்பரங்களை தவிர்த்து வருகின்றனர். ஆனால் தெலுங்கு மற்றும் இந்தியில் பல பிரபலங்கள் அனைத்து விதமான விளம்பரங்களில் நடிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஜெகபதி பாபுவும் ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த ரியல் எஸ்டேட் விளம்பரம் ஒன்று அவரே ஏமாற்றியதாக தற்போது அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

நிலம் வாங்கும் போது உஷார்: மக்கள் தங்களுக்கென சொந்தமாக கால் கிரவுண்டு நிலமாவது இருக்க வேண்டும் என கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை எல்லாம் கொட்டி கடன் வாங்கி நிலம் வாங்குகின்றனர். ஆனால் சில பேராசை பிடித்த மோசடிக்காரர்கள் அதிலும் மோசடி செய்கின்றனர். நிலம் வாங்கும் போது RERA (Real Estate Regulatory Act) உள்ளிட்ட விவரங்களை தெளிவாக ஆராய்ந்து அறிந்து கொண்டு வாங்குங்கள், சமீபத்தில் நானே நில மோசடி ஒன்றில் சிக்கிக்கொண்டேன். ரியல் எஸ்டேட் ஒன்று என்னையே ஏமாற்றி விட்டது என ஜெகபதி பாபு திடீரென சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார். ஆனால், தான் எந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ஏமாந்தேன் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

புஷ்பா 2 வருது: கடந்தாண்டு சலார் படத்தில் பிரித்திவிராஜ் அப்பாவாக ஜெகபதி பாபு நடித்திருந்தார். இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விஜய் தேவரகொண்டா நடித்த ஃபேமிலி ஸ்டார் படத்தில் மிருணாள் தாகூர் அப்பாவாக நடித்தார். புஷ்பா 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்குப் பிடித்த பிரபலமான நடிகர்களே விளம்பரங்களில் நடித்தாலும் அந்த விளம்பரங்களில் ஒரு விஷயங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து உங்கள் பணத்தை செலவிடுங்கள் என்பது தான் ஜெகபதி பாபு தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X