லியோ கேஃபே சீன் ஜகபதி பாபு நடிச்ச படமா?.. புதுசா வீடியோ ஆதாரத்தை தூக்கிட்டு வந்த நெட்டிசன்கள்!

சென்னை: 2005ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தை தழுவி தான் லியோ எடுக்கப்பட்டுள்ளதாக தேங்ஸ் கார்டு எல்லாம் போட்டுள்ளனர்.

ஆனால், டோலிவுட்டில் 2010ம் ஆண்டே கிட்டத்தட்ட 13 வருஷத்துக்கு முன்னாடியே ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை தழுவி ஜகபதி பாபு நடித்த காயம் 2 படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Jagapathi Babu Gaayam 2 already inspired by History of Violence like Leo

இணையத்தில் தற்போது அந்த கேஃபேவில் நடக்கும் சண்டைக் காட்சியை நெட்டிசன்கள் ஷேர் செய்து லோகேஷ் கனகராஜையும், ரத்னகுமாரையும் கலாய்த்து வருகின்றனர்.

பாட்ஷா டைப் கதை: 1995ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் கதை போலத்தான் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படமே 2005ல் உருவாக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் அப்போதே கிளம்பின. அதற்கு முன்பாகவும் பல படங்கள் ஹீரோ ஒரு காலத்தில் கேங்ஸ்டராக இருந்து அதன் பின்னர் திருந்தி வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும் பழைய எதிரிகளை பழிவாங்கும் கதைகள் பல இந்திய சினிமாவிலேயே வெளியாகி உள்ளன.

ஜகபதி பாபு படம்: லியோ திரைப்படம் லேட்டஸ்ட்டாக ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை தழுவி உருவாக்கப்பட்ட நிலையில், 13 வருஷத்துக்கு முன்பாகவே அந்த படத்தை அப்படியே அப்பவே காயம் 2 எனும் டைட்டிலில் உருவாக்கி உள்ளனர். பிரவீன் ஸ்ரீ இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஜகபதி பாபு மற்றும் விமலா ராமன் நடித்துள்ளனர்.

கேஃபே சீன்: இந்நிலையில், தற்போது அந்த படத்தின் கேஃபே காட்சியை நெட்டிசன்கள் சிலர் ஷேர் செய்து லோகேஷ் கனகராஜையும் லியோ படக்குழுவினரையும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்திய சினிமா ரசிகர்கள் 13 வருஷத்துக்கு முன்பே பார்த்த ஒரு பழைய கதையை மீண்டும் ஹை பட்ஜெட்டில் லோகேஷ் உருவாக்கிய நிலையில் தான் படத்தின் மீது இருந்த பெரிய ஹைப் சுக்குநூறாக உடைந்து விட்டதாக கூறுகின்றனர்.

Jagapathi Babu Gaayam 2 already inspired by History of Violence like Leo

லியோ கிளை கதைகள்: இதில், விமர்சன ரீதியாக அடி வாங்கி உள்ள லியோ படத்தை முட்டுக் கொடுக்க ஏகப்பட்ட தியரி இருக்கு, படத்தில் மன்சூர் அலி கானே பொய் சொல்லிட்டாருப்பா என புதுசு புதுசா கதை விட்டுக் கொண்டு கம்பு சுற்றி வருகின்றனர். லியோவே இப்படி இருக்கு? இந்த லட்சணத்தில் லியோ 2 வேண்டும் என விஜய் ரசிகர்கள் விரும்புவது ஆச்சர்யமாக உள்ளதாக அஜித் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X