அந்த ஹீரோயினுடன் என்னை இணைத்து வந்த செய்திகள் உண்மைதான், ஆனால்.. பிரபல வில்லன் நடிகர் ஷாக் தகவல்!
ஐதராபாத்: அந்த ஹீரோயினுடன் என்னைப் பற்றி வந்த செய்திகள் உண்மைதான் என்று பிரபல வில்லன் நடிகர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
நடிகை சவுந்தர்யாவை ஞாபகமிருக்கிறதா? கார்த்திக்கின் பொன்னுமணி படத்தில் நடித்திருந்தாரே அவரேதான். இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமான கன்னட நடிகை அவர்.
ஆர்.வி.உதயகுமார் இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இதன் பாடல்கள் பட்டித் தொட்டியெங்கும் பட்டையை கிளப்பின.

காதலா காதலா
இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் குவிந்தன. தெலுங்கிலும் வாய்ப்புகள் அதிகரித்தன. தமிழில், சத்யராஜின் சேனாதிபதி, ரஜினிகாந்தின் அருணாச்சலம், கமல்ஹாசனின் காதலா காதலா, சிவாஜி, அர்ஜூன் நடித்த மன்னவரு சின்னவரு, ரஜினியின் படையப்பா உட்பட பல ஹிட் படங்களில் நடித்தார்.

ஜெகபதிபாபு
இந்தியில் அமிதாப்பச்சனுடன் சூர்யவன்சம் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில், நடிகர் ஜெகபதிபாபுவுடன் அதிகப் படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார், சவுந்தர்யா. இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததாக அப்போதும் கூறப்பட்டது. இதையடுத்து இருவரை பற்றியும் கிசுகிசுக்களும் கிளம்பின. இருவருக்கும் காதல் இருப்பதாகவும் கூறப்பட்டன.

உண்மைதான்
இந்நிலையில், ஜெகபதிபாபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இருவருக்குமான தொடர்பு பற்றி கேட்கப்பட்டது. அது உண்மைதான் என்று கூறியுள்ளார், ஜெகபதி பாபு. 'அந்த தொடர்பு உண்மைதான். ஆனால், அது நீங்கள் நினைக்கிற மாதிரியான தொடர்பு இல்லை. நான் சொல்கிற தொடர்பு, நல்ல உறவை அடிப்படையாகக் கொண்டது.

வில்லனாக நடிக்கிறார்
சவுந்தர்யாவின் சகோதரருடனும் எனக்கு நல்ல நட்பு உண்டு. அவர் எங்கள் வீட்டுக்கும் நான் அவர்கள் வீட்டுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருந்தோம். இதைதான் நான் தொடர்பு என்று சொன்னேன், நான் சொல்வது நட்பை அடிப்படையாகக் கொண்டது' என விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கில் ஹீரோவாக நடித்து வந்த ஜெகபதிபாபு, இப்போது குணசித்திர வேடத்திலும் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

விஸ்வாசம்
தமிழில், விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த தாண்டவம், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா, சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம், விஜய்யின் பைரவா உட்பட பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் ஜெகபதிபாபு. கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.

ஹெலிகாப்டர் விபத்து
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருந்த நடிகை சவுந்தர்யா, கரீம்நகரில் நடந்த கட்சி பொதுக் கூட்டத்துக்கு பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 2004 ஆம் வருடம் ஏப்ரல் 17 ஆம் தேதி நடந்தது. இது அப்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











