Amala Paul Love - அமலா பாலுக்கு இது மறக்க முடியாத பிறந்தநாள்.. வேற லெவலில் ப்ரொபோஸ் செய்த காதலர்

சென்னை: Amala Paul Love (அமலா பால் காதல்) நடிகை அமலா பாலின் பிறந்தநாளான இன்று ஜகத் தேசாய் என்பவர் காதலை ப்ரொபோஸ் செய்தார். அதை அமலா பாலும் ஏற்றுக்கொண்டார்.

Jagat Desai proposed to actress Amala Paul on her birthday today Amala Paul also accepted it

சாமி இயக்கிய சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். முதல் படம் தோல்வியடைந்தாலும் அந்தப் படத்தின் கதைக்களமும், அமலா பால் ஏற்றிருந்த கதாபாத்திரமும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இதன் காரணமாக அமலா பால் பலரது கவனத்துக்கு உள்ளானார். தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி நடித்த மைனா படம் ஹிட்டாக முன்னணி ஹீரோயின் என்ற இடத்துக்கு நகர்ந்தார்.

தலைவா: மைனா படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு சில படங்கள் கிடைத்தாலும் முக்கியமான படம் தலைவா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த அந்தப் படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. படம் தோல்வியடைந்தாலும் விஜய்யுடன் நடித்த நடிகை என்ற பெயர் கிடைத்ததால் அமலா பாலுக்கு மேலும் பட வாய்ப்புகள் அமைந்தன.

ஏ.எல்.விஜய்யுடன் திருமணம்: தலைவா படத்தில் நடித்தபோது அமலா பாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் காதலித்தனர். பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ஏ.எல்.விஜய் அமலா பாலை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இரண்டு பேரும் விவாகரத்து செய்தனர். அவர்களது விவாகரத்துக்கு காரணமாக பல யூகங்கள் கூறப்பட்டன. ஆனால் அதுகுறித்து இருவரும் அமைதி காக்க ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

அமலா பாலின் கரியர்: விவாகரத்துக்கு பிறகு அமலா பால் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ஆடை படத்தில் நிர்வாணமாக தோன்றி பரபரப்பாக பேசவைத்தார் அமலா பால். தொடர்ந்து கடாவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதற்கிடையே அமலா பால் பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலிப்பதாகவும் இருவருக்கும் திருமணமே நடந்துவிட்டதாகவும் தொடர்ந்து பேசப்பட்டுவந்தது. ஆனால் அமலா பால் அமைதியாகவே இருந்தார்.

Jagat Desai proposed to actress Amala Paul on her birthday today Amala Paul also accepted it

இவர்தான் காதலர்: இந்நிலையில் அமலா பால் இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சூழலில் அமலா பாலுடன் பழகிவந்த ஜகத் தேசாய் என்பவர் இன்று அமலா பாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை ஒரு ரெசார்ட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது நடனமாடியபடியே அவர் அமலா பாலிடம் தன்னுடைய காதலை தெரிவித்தார். ஜகத் தேசாய் ப்ரொபோஸ் செய்ததற்கு அமலா பாலும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் ஓகே சொன்னார். மேலும் இருவரும் மோதிரமும் மாற்றி காதலை உறுதி செய்தனர்.

நடனம் ஆடி காதலை சொல்லி மோதிரம் போட்ட ஜகத் தேசாய் அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர். விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X