வேட்டுவம் படப்படிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு.. பா.ரஞ்சித் மீது ஏன் வழக்கு?.. பிரபலம் அதிரடி

சென்னை: பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் வேட்டுவம் திரைப்படம் உருவாகிவருகிறது. இதில் அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்தபோது ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் என்பவர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் கடைசியாக வெளியான தங்கலான் திரைப்படம் தோல்வியைத்தான் சந்தித்தது. இப்போது அவர் அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோரை வைத்து வேட்டுவம் படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தை அவரே தயாரித்தும்வருகிறார். ரஞ்சித்தின் படம் என்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கண்டிப்பாக தங்கலானில் விட்டதை இதில் பிடித்துவிடுவார் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

ஆரம்பமே பிரச்சனைதான்: படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவந்தது. அந்தவகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு திடீரென மாரடைப்பு வந்ததால்தான் இந்த இழப்பு நேர்ந்ததாக கூறினாலும்; படப்பிடிப்பு தளத்தில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது பலரது குற்றச்சாட்டாக இருக்கிறது. மேலும் ரஞ்சித் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Jaguar Thangam Explains About Accident Happens in Pa Ranjith s Vettuvam Movie Shooting

ரஞ்சித்தின் விளக்கம்: இந்த விபத்து தொடர்பாக விளக்கமளித்திருந்த பா.ரஞ்சித், "ஜூலை 13ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த "வேட்டுவம்" படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது.

பெரிய அதிர்ச்சி: எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துகள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம். ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம்" என சோகத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

ஜாக்குவார் தங்கம் பேட்டி: இந்நிலையில் பிரபல சண்டை பயிற்சியாரான ஜாக்குவார் தங்கம் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "வேட்டுவம் படத்துக்கு ரஞ்சித்தான் இயக்குநர், தயாரிப்பாள்ர். எங்கள் கலை வீர கலை. ரஞ்சித் மனிதாபிமானமுள்ள இயக்குநர். அவர் எந்த தவறும் செய்திருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. இந்த விஷயத்தில் ஏன் ரஞ்சித் மீது எஃப்ஐஆர் போட்டார்கள்? என தெரியவில்லை" என்றார்.

More from Filmibeat

Read more about: வேட்டுவம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X