சினிமா படப்பிடிப்பு தொடங்க அரசு அனுமதிக்க வேண்டும்.. ஜாகுவார் தங்கம் கோரிக்கை!

சென்னை: சினிமா படப்பிடிப்பு தொடங்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜாகுவார் தங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

'Cinema Shooting தொடங்க CM நடவடிக்கை எடுக்கணும்' - Jaguar Thangam | Oneindia Tamil

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த கொரோனா இரண்டாவது அலை கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த சில நாட்களாக கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியிருந்தது.

பெரும் சிரமம்

பெரும் சிரமம்

இந்நிலையில் நேற்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் படப்பிடிக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் நலிந்த கலைஞர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நலிந்த கலைஞர்களுக்கு உதவி

நலிந்த கலைஞர்களுக்கு உதவி

இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் கில்டு சார்பாக இன்று முன்கள பணியாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் நலிந்த திரைப்பட கலைஞர்கள் என 200க்கும் மேற்பட்டோருக்கு தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜாகுவார் தங்கம் நிவாரண பொருட்களை வழங்கினார்.

முதல்வருக்கு கோரிக்கை

முதல்வருக்கு கோரிக்கை

அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜாகுவார் தங்கம், தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார்.

விரைவில் நல்ல செய்தி

விரைவில் நல்ல செய்தி

அதாவது கூடிய விரைவில் சினிமா படப்பிடிப்பு தொடங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த இரண்டு மாத காலமாக கலைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். ஆதலால் மிக விரைவில் ஒரு நல்ல ஒரு செய்தி முதல்வர் அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

உறுப்பினர்கள் பங்கேற்பு

உறுப்பினர்கள் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் நடிகர் இமான் அண்ணாச்சி, ஜெய் ஆகாஷ், தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X