துபாய் பாலைவனத்தில் அரைகுறை ஆடையில் சுற்றிய ஸ்ரீதேவி மகள்கள்

துபாய் : மறைந்த பிரபல முன்னணி நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் சினிமாவிலும், சோஷியல் மீடியாவிலும் செம பிஸியாக இருந்து வருகின்றனர்.

ஜான்வி கபூர் பாலிவுட்டில் பல படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். குஷி கபூர் விரைவில் பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். போனி கபூரோ தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்களை தயாரித்து வருகிறார்.

பிஸியான போனி கபூர்

பிஸியான போனி கபூர்

தமிழ் மற்றும் இந்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் பலவற்றையும் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார். தமிழில் அஜித் நடித்துள்ள வலிமை, இந்தியில் Maiden, Mili, Jeet ki Zid உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார். இவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஹிட் படங்கள்

ஹிட் படங்கள்

தெலுங்கில் சமீபத்தில் ஹிட்டான வக்கீல் சாப் படத்தையும் போனி கபூர் தான் தயாரித்தார். இது இந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க், தமிழில் அஜித் நடித்து வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

 துபாய் பாலைவன பயணம்

துபாய் பாலைவன பயணம்

துபாய் பாலைவனத்தில் குவார்டு பைக்கில் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் சுற்றி வந்த ஃபோட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. டைட்டான அரைகுறை ஆடையில் இவர்கள் சுற்றி வந்துள்ள ஃபோட்டோக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

குவியும் லைக்குகள்

குவியும் லைக்குகள்

ஃபிரண்ட் Orry உடன் துபாய் பாலைவனத்தில் பைக்கில் ஜாலி ரைடு போன ஃபோட்டோக்களை ஜான்வி மற்றும் குஷி ஆகியோர் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். ஷார்ட்ஸ், பிரவுண் கலர் சிறிய டாப்ஸில் இவர் பகிர்ந்துள்ள இந்த ஃபோட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

பாலைவனத்தில் இனிப்புக்கள்

பாலைவனத்தில் இனிப்புக்கள்

இந்த ஃபோட்டோக்களுடன் ஜான்வி கபூர், பாலைவனத்தில் இனிப்புக்கள் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இதற்கு குஷி கபூர், வ்ரூம் வ்ரூம் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இவர்களின் ஃபோட்டோக்களுக்கு திரை பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களையும், லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.

தந்தைக்கு பிறந்தநாள்

தந்தைக்கு பிறந்தநாள்

ஜான்வி கபூர் பதிவிட்டுள்ள இந்த ஃபோட்டோக்களை கிட்டதட்ட 8 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து லைக் செய்துள்ளனர். இந்த ஃபோட்டோக்களின் தொடர்ச்சியாக இன்று தனது தந்தை போனி கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு, தந்தையுடன் அக்கா - தங்கை இருவரும் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவையும் பகிர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறார் ஜான்வி கபூர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X