5 ஹீரோயின்களோடு கோவா கிளம்பும் ஜெய் ஆகாஷ்!

By Shankar

ஜெய் ஆகாஷை நினைவிருக்கிறதா... தன் படங்கள் ஓடுகின்றனவா இல்லையா என்ற கவலையெல்லாம் இல்லாத மனிதர். அவ்வப்போது அசராமல் படங்களை அறிவிப்பது இவர் வழக்கம்.

இவர் படங்களில் கதை இருக்கோ இல்லையோ, எக்கச்சக்கமாக ஹீரோயின்கள் இருப்பார்கள். நினைத்தால் அவர்கள் அத்தனைபேரையும் அள்ளிக் கொண்டு காட்டுக்கோ, கடற்கரைப் பகுதிக்கோ ஷூட்டிங் கிளம்புவது இவர் வழக்கம்.

இந்த பாணியில் அவர் நேற்று அறிவித்துள்ள படங்கள் இரண்டு. ஒன்று ஆனந்தம் ஆரம்பம். மற்றொன்று லவ் இன் மலேஷியா!

ரோஜா வனம்

ரோஜா வனம்

கார்த்திக் - லைலா நடித்த ரோஜா வனம் படத்தில் இன்னொரு ஹீரோவாக அறிமுகமானவர் ஜெய் ஆகாஷ். பின்னர் ரோஜா கூட்டத்திலும் நடித்தார். அடுத்து இவரை வைத்து அகத்தியன் ராமகிருஷ்ணா என்ற படத்தை எடுத்தார். அதன் பின்னர், தானே படங்களைத் தயாரிக்க, இயக்க ஆரம்பித்தார் ஜெய் ஆகாஷ். அவ்வப்போது தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

ஆனந்தம் படத்தின் இரண்டாம் பாகம்

ஆனந்தம் படத்தின் இரண்டாம் பாகம்

இப்போது சிரி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றன. அதன் தலைப்பு ஆனந்தம் ஆரம்பம். படத்தின் ஹீரோ மற்றும் இயக்குநர் ஜெய் ஆகாஷ்தான். இந்தப்படம் சூப்பர் ஹிட்டான ஆனந்தம் படத்தின் இரண்டாம் பாகமாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

ஐந்து நாயகிகள்

ஐந்து நாயகிகள்

கதாநாயகியாக மும்பை வரவு மிஸ் மும்பை 2011 ஏஞ்சல் சிங் மற்றும் ஜியா கான், அலக்கியா, மான்சி, ரம்யா ஆகிய ஐந்து கதாநாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் சுமன் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்திலும் "நாதஸ்வரம் புகழ்" சாய் சக்தியும் நடிக்கின்றனர். இந்த ஐந்து நாயகிகளையும் வைத்து கோவாவில் ரொமான்ஸ் காட்சிகளை எடுக்கிறாராம்.

என்ன கதை?

என்ன கதை?

மூன்று நண்பர்கள் அவர்களுக்குத் திருமணமாகிறது. அவர்களது மனைவியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூவரும் கோவா கிளம்பிச் செல்கின்றனர். அங்கே மூன்று அழகியர் அவர்களைச் சந்தித்து காதல் வயப்படுகின்றனர். விவரம் தெரிந்து மூன்று நண்பர்களின் மனைவியரும் கோவா கிளம்பிச் செல்கின்றனர். அங்கே நடக்கும் காமெடி கலாட்டாதான் கதையாம்.

கோவாவில்...

கோவாவில்...

இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் மற்றும் கோவா ஆகிய எழில் மிகு இடங்களில் நடைபெறுகிறது.இசையமைப்பாளர் சுமன் இசையில் 4 பாடல்கள் இடம்பெறுகின்றன.

லவ் இன் மலேசியா

லவ் இன் மலேசியா

ஜெய் ஆகாஷ் நடித்து இயக்கும் இன்னொரு படம் லவ் இன் மலேஷியா. இந்தப் படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X