இரட்டை வேடத்தில் ஜெய் ஆகாஷ் நடிக்கும் காதலுக்கு கண்ணில்லை…

By Mayura Akilan

காதலுக்கு கண்ணில்லை திரைப்படத்தினை ஜெய் ஆகாஷ் இரட்டை வேடத்தில் நடித்து இயக்கியுள்ளார்.

எம் .எம் .எம் கிரியேஷன்ஸ் மற்றும் ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் இணைந்து ஜெய் ஆகாஷ் இயக்கத்தில் காதலுக்கு கண்ணில்லை எனும் புதிய திரைப்படத்தை தயாரித்திருக்கிறது.

இப்படத்திற்காக பத்திரிக்கையாளர் அறிமுக விழா சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. காதலுக்கு கண்ணில்லை படத்தை பற்றி செய்தியாளர்களிடம் ஜெய் ஆகாஷ் எடுத்துக் கூறினார்.

இரட்டை வேடத்தில்

இரட்டை வேடத்தில்

இப்படத்தின் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் மாறுபட்ட இரு வேடங்களில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்து இயக்கியுள்ளார்.

இரண்டு கதாநாயகிகள்

இரண்டு கதாநாயகிகள்

கதாநாயகிகளாக அலிஷா தாஸ் மற்றும் நிஷா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் இந்து , லலித்யா , பிரபாகரன் , மதனன் , ராம்பாபு , வசந்தகுமார், ஜெய் ரமேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

பழிவாங்கும் கதை

பழிவாங்கும் கதை

காதல் வயப்பட்டு கெட்டவன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படும் ஒருத்தி அவனால் சீரழிக்கப்படுகிறாள். கெட்டவன் கொடுத்த பரிசாக ஒரு ஆண் பிள்ளையை ஈன்றெடுத்த அவள் பிள்ளையால் மேன்மை அடைகிறாளா அல்லது சீரழித்தவன் பழிவாங்கபடுகிறானா? என்பது கரு.

சென்னை சுற்றுப் புறங்களில்

சென்னை சுற்றுப் புறங்களில்

இப்படம் முழுவதும், சென்னை அதன் சுற்றுப்புறங்கள், கிழக்கு கடற்கரைச் சாலை, பாண்டிச்சேரி, ஊட்டி, ஹைதராபாத் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

சண்டைக்காட்சிகள்

சண்டைக்காட்சிகள்

இந்தப்படத்தில் பிரத்யேக சண்டைக்காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

5 பாடல்கள்

5 பாடல்கள்

இசையமைப்பாளர் UK முரளி, கௌதம் இசையில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களை SP பாலசுப்ரமணியம், பிரசன்னா, ஹாரிஸ் ராகவேந்திரா, பாலாஜி, பிரபாகரன் ஆகியோர் பாடியுள்ளனர். படத்துக்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மே மாதம் வெளியீடு

மே மாதம் வெளியீடு

அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிவுற்ற நிலையில் இந்தப்படம் மே மாதம் 2014 ல் திரைக்கு வருகிறது. விரைவில் பாடல்கள் வெளியிடப்பட இருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X