பயமுறுத்தும் மண்டை ஓடுகளுக்கு நடுவே ஜெய்... எண்ணித்துணிக. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சென்னை : ஜெய்யின் 25வது திரைப்படம் கேப்மாரி படத்திற்கு பிறகு நடித்திருக்கும் எண்ணித்துணிக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்பொழுது வெளியாகியுள்ளது.

அதுல்யா உடன் மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கும் எண்ணித்துணிக படத்தை இயக்குனர் வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இந்தபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

சுமாரான வெற்றியை

சுமாரான வெற்றியை

காதல் நாயகனாக இருந்து இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக ஆக்சன் ஹீரோவாக மாறி வரும் ஜெய் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களிலும் ஆக்சன் கொஞ்சம் கூடுதலாகவே இருக்க தற்பொழுது அறிமுக இயக்குனர் வெற்றிச்செல்வன் இயக்கியிருக்கும் எண்ணித் துணிக படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கடைசியாக எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய கேப்மாரியில் நடித்திருந்த இவருக்கு அந்த படம் சுமாரான வெற்றியை பெற்றுக்கொண்டது. மேலும் கேப்மாரி இவரது 25வது படமாகும்.

ட்ரிபிள்ஸ்

ட்ரிபிள்ஸ்

அடுத்தடுத்து கை நிறைய படங்களில் நடித்து வரும் ஜெய் படங்களில் மட்டுமல்ல வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வர சமீபத்தில் ட்ரிபிள்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்திருக்க டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது.

எண்ணித்துணிக

எண்ணித்துணிக

சுசீந்திரன் உடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஒப்பந்தமாகி நடித்து வரும் ஜெய் இப்பொழுது வெற்றிச்செல்வன் உடன் முதன்முறையாக இணைந்து எண்ணித்துணிக படத்தில் நடித்திருக்க அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகி உள்ளது.

க்ரைம் திரில்லர் கதை

க்ரைம் திரில்லர் கதை

கருப்பு நிற ஆடையில் மண்டை ஓடு போன்ற பயமுறுத்தும் முகமூடி அணிந்துகொண்டு நான்கு நபர்கள் ஜெய்யை சுற்றி நிற்க போலீஸ் விசாரணைக்கு உட்பட்ட பகுதி என எழுதி ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டரை பார்க்கும்போதே இது ஒரு க்ரைம் திரில்லர் கதை என்பதை யூகிக்க முடிகிறது. கேப்மாரி படத்திற்கு பிறகு மீண்டும் அதுல்யா, ஜெய் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை ரெயின் ஆப் ஆரோவ்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

சம்மரில் ரிலீசாகும்

சம்மரில் ரிலீசாகும்

எண்ணித் துணிக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டிருக்க ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்த படம் வரும் சம்மரில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X