பாராட்டும் ஜெய்... நெருக்கம் காட்டும் ஆண்ட்ரியா... வலியவன்

By Mayura Akilan

எங்கேயும் எப்போதும்', ‘இவன் வேற மாதிரி' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சரவணனின் அடுத்த படம் ‘வலியவன்'. இப்படத்தில் ஜெய்-ஆண்ட்ரியா ஜோடியாக நடிக்கின்றனர்.

ஆக்‌ஷன் கலந்த ரொமான்ஸ் கதையாக உருவாகி வருகிறதாம் 'வலியவன்'. ஜெய்யின் மார்க்கெட்டுக்கு தகுந்த குறைந்த பட்ஜெட்டில் வலியவன் தயாராகி வருகிறது. படப்பிடிப்பை இழுத்தடித்தால் பட்ஜெட் எகிறும் என்பதால் வேகமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் சரவணன்.

படத்தில் 50 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டனவாம். இனி 25 தினங்கள் படப்பிடிப்பு நடத்தினால் மொத்தப் படமும் முடிந்துவிடும் என்கின்றனர்.

ஸ்டைல் கேர்ள்

ஸ்டைல் கேர்ள்

இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நகரத்து பெண்மணியாக நடிக்கிறார் என்று இயக்குனர் சரவணன் கூறியுள்ளார். நகரத்து கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் ரசிகர்கள் அவரை ஸ்டைலிஷ் ஆன பெண்ணாக பார்ப்பார்கள்.

ஆண்ட்ரியாவை மனதில் வைத்து...

ஆண்ட்ரியாவை மனதில் வைத்து...

காதல் மற்றும் அதிரடி காட்சிகள் நிறைந்ததாக படமாக இருக்கும். எனது முதல் படத்தை போன்று இல்லாமல் இந்த படம் இருக்க வேண்டும் என்பதில் நான் மிக கவனமாக இருந்தேன். எனவே, இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை அஞ்சலியை அணுக கூடவில்லை. நடிகை ஆண்ட்ரியாவை கருத்தில் கொண்டே இந்த படத்தின் கதையை நான் எழுதினேன் என்று சரவணன் தெரிவித்துள்ளார்.

ஜெய் ரொமான்ஸ்

ஜெய் ரொமான்ஸ்

சென்னை 28 படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஜெய். அதை தொடர்ந்து எத்தனையோ நடிகைகளுடன் நடித்து விட்டார்.

அஞ்சலியுடன் கிசுகிசு

அஞ்சலியுடன் கிசுகிசு

எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது அவருக்கும் அஞ்சலிக்குமிடையில் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இந்த செய்தியை மறுத்தார்.

நஸ்ரியாவும் தப்பவில்லை

நஸ்ரியாவும் தப்பவில்லை

அதன்பிறகு திருமணம் என்னும் நிக்கா படத்தில் நஸ்ரியாவுடன் நடித்தபோதும், காதல் கிசுகிசுவில் சிக்கினார் ஜெய். அதற்கு ஜெய் மறுப்பேதும் சொல்லவில்லையென்றாலும், அதனை நஸ்ரியா மறுத்தார்.

ஆண்டிரியாவுடன் முதன் முறையாக

ஆண்டிரியாவுடன் முதன் முறையாக

இந்நிலையில் ஜெய் தற்போது எங்கேயும் எப்போது சரவணன் இயக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியாவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் ஜெய். இதற்கு முன்பு ஜெய், ஆண்ட்ரியா நடித்த பல படங்களைப் பார்த்திருக்கிறாராம். அதில் ஆண்ட்ரியாவின் நடிப்பு அவரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

நெருக்கம் காட்டும் நடிகை

நெருக்கம் காட்டும் நடிகை

அதுமட்டுமின்றி ஜெய், அவர் தன்னை முதல் நாள் சந்தித்ததுமே அவரது நடிப்பை பற்றி புகழ்ந்து தள்ளி விட்டாராம். இதுல உருகிப்போன ஆண்ட்ரியா, ஜெய் ஹீரோ என்றதும் முதலில் ஈடுபாடு இல்லாமல் நடித்து வந்த அவர் இப்போது ஜெய்யுடன் ஓவர் நெருக்கம் காட்டி நடிக்கிறாராம்.

ஆண்டிரியாவுக்கு பாராட்டு

ஆண்டிரியாவுக்கு பாராட்டு

இன்னொருபுறம் அதில் உருகிப்போன ஜெய், இதுவரை நான் ஜோடி சேர்ந்த நடிகைகளுள் ஆண்ட்ரியாதான் சிறந்த நடிகை. அதோடு எனக்கு பொருத்தமான, அம்சமான நடிகையும்கூட என்று அவரை பாராட்டி வருகிறார். இதனால் ரொமான்ஸ் காட்சிகள் அமர்களமாக வந்துள்ளதாம்.

ஜனவரியில் ரிலீஸ்

ஜனவரியில் ரிலீஸ்

வலியவன் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுவென நடந்து வருவதால் சரவணன் இயக்கத்தில் மிகக்குறைந்த தினங்களில் தயாராகும் படமாக வலியவன் இருக்கும் என்கின்றனர். டிசம்பர் அல்லது ஜனவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X