பர்த்டே வாழ்த்துக்கூட கூறவில்லை... அப்போ நிஜமாவே ‘அவங்க’ பிரிஞ்சுட்டாங்களா?

Recommended Video

அஞ்சலி பிறந்தநாள் அன்று காதலை பிரேக்கப் செய்த ஜெய்- வீடியோ

சென்னை: தொடர் படத்தோல்வி காரணமாக அஞ்சலியும், ஜெய்யும் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

எங்கேயும் எப்போதும் படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தனர் அஞ்சலியும், ஜெய்யும். அப்படத்தில் அவர்களது காதல் காட்சிகளும், கெமிஸ்ட்ரியும் பெரிதும் பேசப்பட்டது. அப்படத்தில் சேர்ந்து நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியானது.

அதனைத் தொடர்ந்து வேறு சில படங்களில் சேர்ந்து நடித்த இருவரும், பின்னர் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்கத் தொடங்கினர். ஜோதிகாவின் மகளிர் மட்டும் பட ரிலீசுக்கு முன்னர், அப்படக்குழுவினரின் தோசை சவாலை ஏற்று, ஜெய் அஞ்சலிக்கு தோசை சுட்டுத் தருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இதை உறுதி செய்தன.

கசந்த காதல்:

கசந்த காதல்:

இந்த சூழ்நிலையில், திடீரென இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஜெய்யுடன் எனக்கு காதலில்லை எனக் கூறி புதிய படங்களில் நடிக்கத் தொடங்கினார் அஞ்சலி. ஆனால், அஞ்சலி, ஜெய் இருவருக்கும் அடுத்தடுத்து சொல்லிக் கொள்ளும் வண்ணம் படங்கள் வெளியாகவில்லை.

பிறந்தநாள்:

பிறந்தநாள்:

இதனால், ஏற்பட்ட மனவேதனையில் இருவரும் நிரந்தரமாக பிரிய முடிவு செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில், கடந்த 17ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலிக்கு, சமூகவலைதளப் பக்கத்தில் ஜெய் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

வாழ்த்து கூறவில்லை:

வாழ்த்து கூறவில்லை:

கடந்தாண்டு அஞ்சலி பிறந்ததினத்தை முன்னிட்டு தனது சமூகவலைதளப் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டிருந்தார் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அஞ்சலி, ஜெய் காதல் முறிந்து விட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தொழிலில் கவனம்:

தொழிலில் கவனம்:

ஜெய் நடித்துள்ள ஜருகண்டி விரைவில் ரிலீசாக இருக்கிறது. அஞ்சலியும் அடுத்தடுத்து மூன்று திகில் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம், இருவரும் இனி தங்களது தொழிலில் மட்டும் அதிக கவனத்தை செலுத்துவது என முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X