Just In
- 1 hr ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 1 hr ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 1 hr ago
தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன அம்மா.. அப்பாதான் ஆலோசகர்.. சிம்பு செம ஹேப்பி அண்ணாச்சி!
- 2 hrs ago
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
Don't Miss!
- Automobiles
வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- News
தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்- ராகுல் காந்தி ஏற்பதாக அறிவிப்பு!
- Sports
சிறப்பான தன்னலம் இல்லாத வீரர்... ரன்சை வச்சு மட்டும் அவரை மதிப்பிட முடியாது!
- Lifestyle
பொய் பேசுறது இந்த 6 ராசிகாரங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரியாம்... ரொம்ப உஷாரா இருங்க இவங்ககிட்ட...!
- Finance
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த டிசிஎஸ்.. உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக உருவெடுத்த டிசிஎஸ்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
"இருந்துச்சு ஆனா இல்ல"... ஜெய், அஞ்சலி காதல் பற்றி நடிகை ராய் லட்சுமி!

சென்னை: நடிகர் ஜெய், அஞ்சலி காதல் ஒரு படத்திலேயே முடிந்துவிட்டதாக, நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.
ஜெய், ராய் லட்சுமி, கேதரின் தெரசா, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள நீயா-2 திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகை ராய் லட்சுமி, தன்னுடைய காதல் அனுபவம் மற்றும் நடிகர் ஜெய், அஞ்சலி காதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.
'இவ்ளோ பெரிய ஹீல்ஸ்-ஆ போட்டுட்டு வர்றது'.. ராய் லட்சுமியால் சங்கடத்தில் நெளிந்த ஜெய்!

எடை குறைத்தேன்
இதுகுறித்து அவர் கூறியதாவது, " நான் சினிமாவுக்கு வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. இந்தியில் ஜூலி படத்தில் நடிக்க எடையை குறைக்கும்படி இயக்குனர் சொன்னதால் பால், சப்பாத்தி சாப்பிடுவதை நிறுத்தி அரிசி உணவுகளையும், உருளை கிழங்கையும் சாப்பிட்டு உடற்பயிற்சிகள் செய்து 75 கிலோவாக இருந்த எடையை 59 கிலோவாக குறைத்தேன்.

நிறைய காதல்
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். எனது வாழ்க்கையில் நிறைய முறை காதல் வந்துபோய் இருக்கிறது. நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். நீயா-2 படம் சிறப்பாக வந்துள்ளது. இயக்குனர் எல்.சுரேஷ் கடுமையாக உழைத்து இந்த படத்தை எடுத்துள்ளார். நிறைய கிராபிக்ஸ் காட்சிகளும் இருக்கும்.

ஜெய் - அஞ்சலி காதல்
இதில் நடிக்கும்போது எனக்கும் கேதரின் தெரசா, வரலட்சுமி ஆகியோருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அடுத்து சின்ட்ரல்லா, மிருதன்-2 கன்னடத்தில் ஜான்சி உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறேன். ஜெய், அஞ்சலி இருவரும் எனக்கு நண்பர்கள். அவர்கள் காதல் ஒரு படத்திலேயே முடிந்துவிட்டது.

தவறாகிப்போன மீ டூ
‘மீ டூ' இயக்கம் வரவேற்கத்தக்கது. ஆனால் போகப்போக அதை தவறாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் அதன்மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது" என ராய் லட்சுமி கூறினார்.

காதல் உறுதி
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இருக்கு ஆனா இல்ல என்ற ரேஞ்சுக்கு அதிகம் பேசப்பட்டு வருவது ஜெய் அஞ்சலி காதல் கதை தான். தாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என அவர்கள் பலமுறை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராய் லட்சுமியின் இந்த பேட்டி, அவர்களின் காதலை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது.