நெஞ்சைப் பதற வைக்கும் கொடூரம்... ஜெய் பீம் ஒரு உண்மை கதை!

சென்னை : சூர்யாவின் நடிப்பில் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது ஜெய் பீம்.

மணிகண்டன், லிஜோமோல் ஜோஷ்,ரஜிஷா விஜயன்,பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் என பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

சூர்யா முதல் முறையாக வக்கீலாக நடித்துள்ள இந்த திரைப்படம் நெஞ்சை பதற வைக்கும் உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

உண்மை சம்பவங்களை மையப்படுத்தி

உண்மை சம்பவங்களை மையப்படுத்தி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான கர்ணன் திரைப்படம் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. இப்பொழுது அதை தொடர்ந்து உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ஜெய் பீம்.

ஜெய்பீம்

ஜெய்பீம்

1993ஆம் காலகட்டங்களில் தமிழ்நாட்டில் நடந்தேறிய ஒரு கொடூர உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படத்தை இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கியுள்ளார். கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக அறியப்பட்ட இயக்குனர் ஞானவேல் இப்போது ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கி இருக்க இதில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

சூர்யா வழக்கறிஞராக

சூர்யா வழக்கறிஞராக

இதுவரை சூர்யா பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் முதல் முறையாக வழக்கறிஞராக இந்த படத்தில் நடித்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. மேலும் சூர்யா இந்தப் படத்தில் வக்கீலாக நடித்துள்ள தோடு தயாரித்தும் உள்ளார். 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக அடுத்தடுத்து சூர்யா தயாரித்து உள்ள 7 திரைப்படங்களும் ஒவ்வொன்றாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நெஞ்சைப் பதற வைக்கும் கொடூர நிகழ்வு

நெஞ்சைப் பதற வைக்கும் கொடூர நிகழ்வு

தனது ஒவ்வொரு படங்களிலும் சமூக பிரச்சினைகளை கையில் எடுக்கும் சூர்யா இந்த படத்திலும் அதே போல சமூக பிரச்சினை ஒன்றை கையில் எடுத்துள்ளார். 1993 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில்வ் நடந்தேறிய நெஞ்சை பதற வைக்கும் கொடூர நிகழ்வு படமாக்கப்பட்டுள்ளது. விசாரணை என்ற பெயரில் பழங்குடி இன மக்களில் ஒருவர் போலீசாரால் அழைத்துச் செல்லப்படுகிறார். அதன்பின் அங்கு விசாரணை என்ற பெயரில் பல கொடுமைகள் அதிகாரத்தின் பெயரில் நடக்கிறது.

போராடி கணவரை மீட்கிறார்

போராடி கணவரை மீட்கிறார்

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தனது கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரைக் காணாமல் தவிக்கும் அவரது மனைவி எவ்வாறு போராடி கணவரை மீட்கிறார் என்பதே இப்படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ஒவ்வொரு வசனங்களும் சாட்டையடியாக தெறிக்கிறது. இவ்வாறு நெஞ்சைப் பதறவைக்கும் உண்மை சம்பவங்களை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படத்தை நவம்பர் 2ஆம் தேதி காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X