விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல ஹீரோயின்... விஜய்யோட நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது!

சென்னை : நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஷாம், யோகிபாபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயை யசுதா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் மாஸ்டர், பீஸ்ட் படங்களின் வசூல் சாதனையை அடுத்து தற்போது தளபதி 66 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. புஷ்பா படத்தின் வெற்றி அவருக்கு இந்த வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது.

தளபதி 66 படம்

தளபதி 66 படம்

விஜய்யின் தளபதி 66 படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் அடுத்த மாதம் விஜய்யின் பிறந்தநாளையொட்டி டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாகவும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் 2வது கட்ட சூட்டிங்

ஐதராபாத்தில் 2வது கட்ட சூட்டிங்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் முதல்கட்ட சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்தப் புகைப்படங்களில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் ஜோடி சிறப்பாக காணப்பட்டது. இந்தப் படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

மகிழ்ச்சியில் ராஷ்மிகா

மகிழ்ச்சியில் ராஷ்மிகா

இந்த புகைப்படங்களில் நடிகை ராஷ்மிகா இந்தப் படத்தில் இணைந்தது குறித்த மிகவும் உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அவர் விஜய்க்கு திருஷ்டி சுற்றிப் போடுவது போன்ற புகைப்படங்களும் வெளியாகின. அந்த அளவிற்கு அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். விஜய்யுடன் இணைவது யாருக்குமே மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விஜய்யுடன் நடிக்க ஜெய்பீம் நடிகை விருப்பம்

விஜய்யுடன் நடிக்க ஜெய்பீம் நடிகை விருப்பம்

இந்நிலையில் ஜெய் பீம் படத்தில் நடித்த நடிகை லிஜோமோல் ஜோஸ் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் சூர்யாவுடன் அவர் நடித்து அமேசான் பிரைமில் வெளியான ஜெய் பீம் படம் அவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது.

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

முன்னதாக சிவப்பு பச்சை மஞ்சள் படத்தில் சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷுடன் இணைந்து லிஜோமோல் ஜோஸ் நடித்திருந்தார். இந்தப் படமும் இவருக்கு சிறப்பாக அமைந்தது. மலையாளத்திலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை இவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X