‘ஜெய் பீம்’வழக்கு சர்ச்சையில் சிக்கினாலும்... சூர்யா, ஜோதிகாவுக்கு கிடைத்த ஆறுதல் தரும் செய்தி

சென்னை : நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்திற்கு மற்றுமொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம்.

இப்படத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சினிமா ரசிகர்கள் என பலரும் பாராட்டியிருந்தனர்.

ஜெய்பீம்

ஜெய்பீம்

கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான படம் ஜெய்பீம். இப்படத்தில் இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் குறித்து பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து இருந்தார். காவலர்களின் காட்டுமிரட்டித்தனத்தின் உச்சம் குறித்தும் இப்படத்தில் தோலுரித்து காட்டப்பட்டது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இயல்பான நடிப்பு

இயல்பான நடிப்பு

வழக்கறிஞர் சந்துரு ரோலில் சூர்யா அழகாக இயல்பாக நடித்திருந்தார். ராசாக்கண்ணுவாக மணிகண்டன், செங்கேணி கதாபாத்திரத்தில் லிஜோமோல் ஜோஸ் நடித்திருந்தார்கள். இவர்கள் இருவரும் நடித்திருந்தார்கள் என்பதைவிட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவர்கள் இருவரின் கதாபாத்திரம் இயல்பாக இருந்தது.

மேலும் இரு விருது

மேலும் இரு விருது

இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படத்திற்கு மற்றுமொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவ்விழாவில் சிறந்த நடிகையாக லிஜோமோல் ஜோஸும், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது எஸ்.ஆர். கதிருக்கும் கிடைத்துள்ளது. இத்தகவலை திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

Recommended Video

எனக்கு Pair இல்லாததுக்கு இதான் காரணம் | Manikandan | Sila Nerangalil Sila Manithargal
மணிகண்டனுக்கு விருது

மணிகண்டனுக்கு விருது

இருதினங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற 12வது தாதாசாகேப் சர்வதேச திரைப்பட விழாவில், ராசகண்ணுவாக நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகருக்கான விருதையும், சிறந்த படமாக ஜெய்பீம் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

ஆஸ்கர் தான் கிடைக்கல

ஆஸ்கர் தான் கிடைக்கல

ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலிலும் ஜெய்பீம் திரைப்படம் இடம் பெற்றிருந்தது. இறுதிப் பட்டியலில் இந்த திரைப்படம் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப் போட்டி பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம் பெறாததால் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். தற்போது ஜெய்பீம் படம் தொடர்ந்து விருதை பெற்றுவருவதால், ஆஸ்கர் தான் கிடைக்கல, ஆனால் தொடர்ந்து பல விருதுகளை குவித்து வருவதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X