வாடிவாசலுக்குப் பிறகு சூர்யாவை இயக்கப் போவது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல்

சென்னை: விக்ரம் திரைப்படத்தில் ரணகளமாக இறுதிக் காட்சியில் தோன்றி திரையில் இரத்தம் தெறிக்கவிட்டு தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் நடிகர் சூர்யா. ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தின் அசத்தல் நடிப்பிற்காக கமலிடமிருந்து ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக பெற்றார்.

இப்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தேசிய விருதுகள் குவித்த இயக்குனர்கள் என்பதால் இரு படத்திற்கும் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.

இந்த இரு படங்களையும் தொடர்ந்து ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேலுடன் மீண்டும் கை கோர்க்கிறார் சூர்யா.

 ஜெய் பீம் சாதனைகள்

ஜெய் பீம் சாதனைகள்

ஜெய் பீம் திரைப்படம் சந்தித்த வெற்றி மற்றும் பிரச்சனகள் பற்றி அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்தப் படம் செய்த சில சாதனைகள் பெரும்பாலும் அறியப்படாதவை. சென்ற ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியத் திரைப்படம் என்கிற பெருமையையும், IMDB இணையதளத்தில் அதிகம் பிரபலமடைந்த திரைப்படம் என்கிற தகுதியையும் பெற்றது. டுவிட்டரிலும் அதிகமாக பேசு பொருளான இந்தியப் படங்களில் நான்காவது இடத்தை பிடித்திருந்தது.

 2D எண்டர்டெய்ன்மெண்ட்

2D எண்டர்டெய்ன்மெண்ட்

சூர்யா மற்றும் ஜோதிகா, 2D எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதிலிருந்தே தரமான படங்களை கொடுத்து வருகின்றனர். கடைசியாக வந்த ஓ மை டாக் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக கார்த்தி மற்றும் அதிதி சங்கர் நடித்துள்ள விருமன் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஞானவேல், சூர்யாவை வைத்து இயக்கப் போகும் படத்தையும் அதே நிறுவனம் தயாரிக்கப் போவதாக அந்நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஒரு விருது வழங்கும் விழாவில் கூறியுள்ளார்.

 ஞானவேல்-சூர்யாவின் 3-வது படம்

ஞானவேல்-சூர்யாவின் 3-வது படம்

ஜெய் பீம் திரைப்படத்திற்கு முன்னதாகவே சூர்யாவும் ஞானவேல் அவர்களும் ஒரு படத்தில் பணிபுரிந்துள்ளார்கள். கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடித்த ரத்த சரித்திரம் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு வசனம் எழுதியவர் ஞானவேல். அந்த வகையில் அடுத்து அவர்கள் இணையப் போவது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் வெளிவந்த பயணம் மற்றும் தோனி திரைப்படங்களுக்கும் இவர்தான் வசனகர்த்தா என்பது கூடுதல் தகவல்.

 கதையின் ஜானர்

கதையின் ஜானர்

ஜெய் பீம் திரைப்படம் சீரியஸான கதைக்களமாக உருவானது. ஆனால் அதற்கு முன் ஞானவேல் எடுத்த கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படம் நகைச்சுவை ஜானரில் இருந்தது. இம்முறை அவர் எந்த ஜானரை கையாளப்போகிறார் என்று மக்கள் ஆர்வமடைந்துள்ளனர். ஜெய் பீம் போல் இல்லாமல் இதில் சூர்யா முழுக்க முழுக்க கதையின் நாயகனாக நடிக்கவுள்ளாராம். கூடிய விரைவில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியில் அறிவிக்கப்படவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X